இயக்குனர் மணிரத்தினத்தை கோபப்பட வைத்த லைக்கா நிறுவனம்.!
சென்னை 20 ஆகஸ்ட் 2022 இயக்குனர் மணிரத்தினத்தை கோபப்பட வைத்த லைக்கா நிறுவனம்.!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிகப் பிரமாண்டமான அதிக பொருள்கள் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
இந்த திரைப்படத்தில் மிக அதிகமான திரை நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் அவர்களுக்கு ஒரு பெரும் பங்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்தில் உடை, அலங்காரம் என ஒவ்வொன்றுக்கும் மிகப்பெரிய தொகை செலவழிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு வரும் லாபத்தில் 30 சதவீத பங்கு இயக்குனர் மணிரத்னத்திற்கும், 70 சதவீத பங்கு லைக்கா நிறுவனத்திற்கும் சேரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இநத திரைப்படத்தின் இரண்டாவது பாடலான சோழா சோழா என்ற பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தற்போது தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவும் கலந்துகொண்டார்.
முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை பார்த்தவுடன் இந்த திரைப்படத்தை தெலுங்கில் நான் வெளியிடுகிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்திடம் சொல்லாமல் லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் கொடுத்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட இயக்குனர் மணிரத்னம் கோபப்பட்டு உள்ளார்.
ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்படத்தை வெளியிட்டால் அவர்களுக்கும் பங்கு தரவேண்டும்.
அதன்பின்பு லைகா நிறுவனம், ரெட் ஜெயின் மூவிஸ் இல்லாமல் தற்போது எந்த திரைப்படத்தையும் வெளியீடு செய்ய முடியாது.
அதனால் தான் அந்த நிறுவனத்திற்கு திரைப்படத்தை கொடுத்துள்ளோம் என வாதாடி உள்ளனர்.
அதன் பிறகு இயக்குனர் மணிரத்னமும் வேறு வழியில்லாமல் சரி என ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.