“இந்தியன் 2” திரைப்படத்தின் பிரம்மாண்ட இரண்டு போஸ்டரை விண்ணில் பறக்க விட்ட லைக்கா நிறுவனம் !!

“இந்தியன் 2” திரைப்படத்தின் பிரம்மாண்ட இரண்டு போஸ்டரை விண்ணில் பறக்க விட்ட லைக்கா நிறுவனம் !!

சென்னை 04 ஜூலை 2024 தமிழ் திரைப்பட உலகில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்திய திரைப்பட உலகில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில்  இசையமைப்பாளர் அனிருத் இசையில் மிகப்பெரிய அளவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”.

இந்த இந்தியன் 2 திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இந்த இந்தியன் 2 திரைப்படத்திற்காக படத்தின்  படக்குழுவினர்  இந்தியாவை கடந்து உலக அளவில் சென்று இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த இந்தியன் 2 திரைப்படத்தை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் மிக பிரபலமான Dubai Skies என்ற வானில் பாராசூட்டில் பறக்கும் வீரர்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் பேனரை வானில் பறக்கவிட்டனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.