ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பாடல் திருட்டு விவகாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் எஸ்கேப் ஆன இயக்குனர் சக்தி சிதம்பரம் !!
‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பாடல் திருட்டு விவகாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பாதியில் எஸ்கேப் ஆன இயக்குனர் சக்தி சிதம்பரம் !!
சென்னை 19 நவம்பர் 2024 நடிகர் நடன இயக்குனர் பிரபு தேவா நடிப்பில் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தை டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன்
தயாரித்துள்ளார்.
இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் வருகிற 22ஆம் தேதி அன்று தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா, நடிகை மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் வருகிற 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பிரசாத் லேப்பில இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த பாடலை எழுதியது பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்தான் என்று விகடன் இதழுக்கு திரைப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேட்டி அளித்தபோதும் இதையே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் லிரிக் வீடியோ வெளியான போது, இந்த திரைப்படத்தின் பாடல்களை இயக்குநர் சக்தி சிதம்பரமே எழுதியதாக பதிவாகி இருந்தது.
இது பெரும் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்க்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த பாடலை இந்த திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் என்பவர்தான் இந்த போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ பாடலை எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே நமது இணையதளத்தில் ஒரு பதிவு போட்டு இருந்தோம்.
அடுத்தவன் குழந்தைக்கு தனது இனிஷியலை போட்டுக் கொள்ளும் இயக்குனர் சக்தி சிதம்பரம் !!
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய பாடலை எதற்காக அதனை மறைத்து உங்கள் பெயரை போட்டுள்ளீர்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் , பத்திரிக்கையாளர்கள் இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினர்.
இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசும்போது, இதற்கான விளக்கத்தை அளிப்பார் என தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன் கூறியதை அடுத்து பத்திரிகையாளர்கள் அமைதியாக இருந்தனர்.
ஆனால் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசும்போது பாடல் விவகாரம் குறித்து பேசவில்லை.
இதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் மீண்டும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இதனை அடுத்து இயக்குநர் சக்தி சிதம்பரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த அரங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
பின்னர், தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன் இதுகுறித்து விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனால் பத்திரிகையாளர்கள் அனைவரும் அமைதி காத்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் மேடைக்கு வந்து என்ன நடந்தது என்பதை விளக்கம் அளித்தார்.
இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தில் நான் நான்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.
இதுநாள் வரை எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள் என நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் மேடையில் பேசினார்.
மேலும், நான் இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளேன்.
திரைப்படத்தின் பட்ஜெட் 8 கோடி என கூறிவிட்டு 15 கோடி செலவு செய்ததை பட்ஜெட் அதிகமானதால் இதனை குறித்து நான் தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன்.
அந்த கோவத்தில் இயக்குநர் எனது பெயரை போட மறுத்துவிட்டார்” என ஜெகன் கவிராஜ் இவ்வாறு மேடையில் பேசினார்.











