விக்ரம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடையில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன்.!! 

சென்னை 26 மே 2022 விக்ரம்’ திரைப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடையில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன்.!! 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப் படம்தான் ‘விக்ரம்’.

இந்த விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்…கமல் சாரை பார்த்துதான் நான் சினிமா கற்றுக்கொண்டேன்.

என்னுடைய நான்காவது படத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் வேலை பார்த்த என்னுடைய படக்குழு சார்பாக நன்றி.

எங்கிருந்தோ என்னை கமல்ஹாசன் ஊக்குவித்து செய்து சினிமாவுக்குள் கொண்டு வந்தார்.

அவரை இயக்கியது எல்லாம் கனவுதான்.

படத்தைப் பொருத்தவரை ஒரு திருப்தியான வேலை நடந்திருக்கிறது.

அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்…படத்திற்காக என்னை வேலை வாங்கியதை விட இந்த விக்ரம் படத்தின் புரோமோஷனுக்காகத்தான் இப்படி லோகேஷ் வேலை வாங்குகிறார்.

என்னுடைய கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.

விக்ரம்’ படத்திற்காக டெல்லி, கொச்சி, மும்பை, கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த நான்கு ஆண்டுகள் எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி.

நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த நான்கு ஆண்டுகள் எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி.

நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

நான்கு வருடங்கள் என் ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ரிலீஸுக்கு முன்பாகவே விக்ரம் திரைப்படம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது.

ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க முயற்சித்தோம்.

அதில் ஓரளவு வெற்றி பெற்றதாக நம்புகிறோம்.

நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.

நான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு சினிமாவில் மட்டுமல்ல மக்களுக்கும் செய்யவேண்டிய பணி நிறைய உள்ளது.

விவசாயிக்கு நிலத்தில் போட வேண்டும் என்ற எண்ணம் இருப்பது போலதான், எனக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் இது போல செய்து கொண்டிருக்கிறேன்.

நான்கு ஆண்டுகள் நான் சினிமாவில் இல்லாத போதும் அமைதி காத்த ரசிகர்களுக்கு நன்றி.

இப்போது ‘விக்ரம்’ படத்திற்கான உற்சாகம் அவர்களிடையே தொற்று நோய் போல பரவி கொண்டிருக்கிறது.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஏன் சினிமாவிலேயே முதலீடு செய்கிறீர்கள் ஏதாவது ஷாப்பிங் மால் கடைகள் கட்டலாமே என்று என்னிடம் சிலர் கேட்பார்கள்.

ஒரு விவசாயி தான் சம்பாதிக்கும் பணத்தை நிலத்தில் போடத்தான் எப்போதும் விரும்புவான்.

நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் என்னுடைய ரசிகர்கள் நற்பணிகளுக்காக 20 ரூபாய் செலவு செய்வார்கள்.

எனவே அந்த ஒரு ரூபாயை நான் சம்பாதிக்க வேண்டும்.

இந்தப் படக்குழுவினர் தூங்கி ரொம்ப நாட்களாகிவிட்டன.

நான் சினிமாவின் ரசிகன்.

நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்பதற்காக தான் படம் எடுக்க வந்தேன்.

அதில் ஒரு முயற்சிதான் ‘விக்ரம்’.

இந்தப் படத்திற்கு பிறகு அவர்களுக்கு நல்ல உறக்கமும் நல்ல பட வாய்ப்பும் கிடைக்கவேண்டும்.

படத்தை அகண்ட திரையில் பாருங்கள்.

ரசிகர்களுக்கு
அனைவருக்கும் நல்ல விருந்து காத்திருக்கிறது” என்றார்.

error: Content is protected !!