ஜெய் ஹனுமான்’ படத்தின் வெளியான முதல் பார்வையில் ஹனுமானாக பிரம்மிக்க வைக்கிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி!
’ஜெய் ஹனுமான்’ படத்தின் வெளியான முதல் பார்வையில் ஹனுமானாக பிரம்மிக்க வைக்கிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி!
சென்னை 31 அக்டோபர் 2024 பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார். தேசிய விருது வென்ற நடிகர் ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பல திறமையாளர்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
ஹனுமானாக ரிஷப்ஷெட்டி நடிக்கிறார் என்பதுடன் படத்துடன் முதல் பார்வை போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர் ரிஷப்ஷெட்டியின் கட்டுமாஸ்தான உடலை மட்டும் காட்டாமல் ஹனுமானுடன் தொடர்புடைய ஆழ்ந்த பக்தியையும் வலிமையையும் பிரதிபலிக்கிறது.
’ஜெய் ஹனுமான்’ என்பது உடைக்க முடியாத சக்தி மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர். அதிரடி ஆக்ஷன் மற்றும் புராண காவியமாக இந்தப் படம் உருவாகிறது.
அனுமனின் மௌனம் சரணடைதல் அல்ல, மறைந்திருக்கும் சக்தி சரியான சமயத்தில் வெளிவரக் காத்திருக்கிறது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பிரசாந்த் வர்மா,
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர்











