கே.வி. ஆனந்த் எனக்கு சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் . சொன்னார், இது பொய்ச் செய்தியாக இருக்கக் கூடாதா ? கடைசி நிமிடங்கள் பற்றி நடிகர் சிலம்பரசன் டிஆர் உருக்கம்

சென்னை 30 ஏப்ரல் 2021

கே.வி. ஆனந்த் எனக்கு சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச்் சொன்னார், இது பொய்ச் செய்தியாக இருக்கக் கூடாதா ? கடைசி நிமிடங்கள் பற்றி நடிகர் சிலம்பரசன் டிஆர் உருக்கம்

விகடன் நிறுவனத்தில் பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றியிருக்கிறார் கே வி ஆனந்த்

கே.வி. ஆனந்த். (தற்போதைய வயது 54.)

இவர் 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படத்திற்காக முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்

தேன்மாவின் கொம்பத்து’ மொழி மாற்றம் செய்யப்பட்டு அதன் பின்னர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’. திரைப்படம்

முதல்வன், பாய்ஸ் படங்களிலும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் ஷங்கருடன் தோன்றியிருப்பார்.

2005ஆம் ஆண்டில் வெளிவந்த ஶ்ரீகாந்த் கோபிகா பிரித்வி ராஜ் விவேக் நடித்த கனா கண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார்.

அதன் பிறகு தொடர்ந்து 2009 அயன் 2012 மாற்றான் 2019 காப்பான் எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை கதாநாயகனாக வைத்து இயக்கினார்.

நடிகர் ஜீவாவை கதாநாயகனாக வைத்து 2010 கோ படத்தை இயக்கினார்.

நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து 2015 அனேகன் படத்தை இயக்கினார்.
.
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக வைத்து 2017 கவண் திரைப்படத்தை இயக்கினார்.

கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது இவரே காரை ஓட்டிக்கொண்டு ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

இவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மரணம் அடைந்தார்.

ஆனால், அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை.

அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கே.வி ஆனந்த் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் டிஆர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது..

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது.

அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார்.

சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார்.

நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்து விட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

பொய்ச் செய்தியாக இருக்கக் கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்  இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் மிக முக்கியமானவர்.

நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்”.

இவ்வாறு சிலம்பரசன் டிஆர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/SilambarasanTR_/status/1388022261689372675?s=19

error: Content is protected !!