கொரோனா தொற்று காரணமாக கே.வி. ஆனந்தின் உடலை நேரடியாக பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
சென்னை 30 ஏப்ரல் 2021
கொரோனா தொற்று காரணமாக கே.வி. ஆனந்தின் உடலை நேரடியாக பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இயக்குனர் ஒளிப்பதிவாளருமான
கே.வி ஆனந்த் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் மகள் இருவருக்கும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி அன்று கே.வி.ஆனந்துக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கே.வி ஆனந்த் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி அவர் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று இருந்ததால் கே.வி ஆனந்த் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது..
ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
கே.வி ஆனந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து செல்லும் வழியில் சிறிது நேரம் அவருடைய வீட்டின் முன்பு ஆம்புலன்ஸிலேயே அவரது உடல் வைக்கப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது கே.வி.ஆனந்தின் உடலை முழுமையாக பார்க்க முடியாமல் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.











