கே ஜி எப் பில் கோலாகலமாக துவங்கியது இயக்குனர் பா. இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை!!

கே ஜி எப் பில் கோலாகலமாக துவங்கியது இயக்குனர் பா. இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை!!

சென்னை 24 டிசம்பர் 2023 இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 23.12.23 KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக துவங்கியது .

வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை கோவை என்று பல ஊர்களில் நடைபெற்று வந்த நிக்கழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

இந்த வருடம் கே ஜி எப் மற்றும் ஓசூரிலும் , சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக ஓசூரில் துவங்கியது.

புத்தர் வாழ்த்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது

கே ஜி எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது.
தொடர்ந்து இந்த மக்களோடு பயணிக்க விரும்புகிறேன்.
கலை மக்களை ஒருங்கிணைக்கும் . பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நாம் பெரும் புரட்சியாக அணிதிரள்வோம்.
என்று பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர் தினேஷ், கலையரசன் , எழுத்தாளர் தமிழ்பிரபா, இயக்குனர் தினகர் , ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து முனுசாமி பெரிய மேளம்.. சித்தன் ஜெய மூர்த்தி குழுவினரின் சித்தன் குணா, வேல்விழி மற்றும் ரவி ஆகிய குழுவினர் பங்கு பெற்று இன்றைய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இன்று 24 டிசம்பர், மாலை 4 மணிக்கு ஓசூரில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இடம்: மைதானம், லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு, ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்.