கூரன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நிதின் வேமுபதி.

ஒளிப்பதிவாளர் :- மார்டின் தன்ராஜ்.

படத்தொகுப்பாளர் :- மாருதி.

இசையமைப்பாளர் :- சித்தார்த் விபின்.

தயாரிப்பு நிறுவனம் :- கனா புரொடக்சன்ஸ் -விபி கம்பைன்ஸ்.

தயாரிப்பாளர் :- இயக்குநர் விக்கி.

ரேட்டிங் :- 3.25./5.

கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது அம்மாவுடன் நடந்து செல்லும் நாய்க்குட்டி கட்டுப்பாடு இல்லாத கார் ஒன்று மோதி நாய்க்குட்டி அம்மா கண் முன் குட்டி துடிதுடித்து இறந்து விடுகிறது.

அந்தத் அம்மா நாய் காரை குரைத்துக் கொண்டே துரத்தி கொண்டு பின் செல்கிறது.

அதன் பிறகு தனது குட்டி நாயின் இறப்புக்கு நீதி கேட்டு கொடைக்கானலில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் நிலையத்தையே அம்மா நாய் சுற்றி திரிகிறது.

இந்தநிலையில், வேறு ஒரு விஷயத்திற்காக மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் காவல் நிலையத்திற்கு வருகை புரியும், அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அம்மா நாய் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் பின்தொடர்கிறது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னர் அந்த அம்மா நாயின் நடவடிக்கையின் மூலம் அம்மா நாய் விபத்து நடந்த இட​த்திற்கு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்துச் செல்கிறது.

அங்கே புதைக்கப்பட்டிருக்கும் இறந்த நாய் குட்டியை பார்த்தவுடன் தன் குட்டி நாயின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் அம்மா நாய் என்பதை மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் புரிந்து கொள்கிறார்.

இந்த குட்டி நாய் மரணத்திற்கு யார் காரணம் என மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் விசாரணையில் இறங்கும் போது குட்டி நாய் சாவுக்கு தொழிலதிபர் கவிதா பாரதி மகன் இயக்குனர் நிதின் வேமுபதி தான் விபத்துக்கு காரணம் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.

10 வருடமாக எந்த வழக்கையும் எடுக்காமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் தாய் நாய்க்கு ஆதரவாக வாதாட களமிறங்குகிறார்.

அதன் பின்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த வழக்கில் அந்த அம்மா நாய்க்கு நீதி கிடைத்ததா? நீதி கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த கூரன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கூரன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார்.

இந்த கூரன் திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர் நீதிமன்ற காட்சியின் போதும் தனது நிதானமான மற்றும் தெளிவான வாதத்தின் மூலம் அம்மா நாய் பக்கம் இருக்கும் நியாயத்தை மிக அருமையாக நடிப்பின் மூலம் கதை புத்தகத்தை உணர்ந்து அசத்தியிருக்கிறார்.

நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ் கதைக்கு ஏற்ப பயணித்து, நாயின் நடவடிக்கைகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு மிகச்சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார்.

சட்டம் என்பது ஆறறிவு ஜீவன்களுக்கு மட்டும் அல்ல ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் சமம் என்ற கருத்தை தனது திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் “மதுபானக் கடைகள் மூலம் எவ்வளவு பணம் வருகிறது என்று பார்க்கும் அரசாங்கம், அதன் மூலம் எவ்வளவு குடும்பங்கள் அழிகிறது எவ்வளவு மரணம் நிகழ்கிறது, என்பதை இந்த அரசாங்கம் பார்ப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை உள்ளிட்ட தனது கூர்மையான வசனங்கள் மூலம் சமூக சீர்க்கேடுகளை தோலுரித்து காண்பித்துள்ளார்.

மொத்தத்தில், ‘கூரன்’ திரைப்படத்தில் சட்டமும் நீதியும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும் ஆறறிவு ஜீவன்களுக்கும் சமம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

error: Content is protected !!