தென்சென்னை திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரங்கா, ரியா, நிதின் மேத்தா, இளங்கோ குமணன், வத்சன் எம் நடராஜன், ராம், விஷால், சுமா, ஆறு பாலா, திலீபன் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரங்கா.

ஒளிப்பதிவாளர் :- சரத்குமார் மோகன்.

படத்தொகுப்பாளர் :- இளங்கோவன் சி எம்.

இசையமைப்பாளர் :- ஜென் மார்ட்டின்.

தயாரிப்பு நிறுவனம் :- RFC புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ரங்கா.

ரேட்டிங் :- 2.5./5.

கப்பல் படையில் அதிகாரியாக வேண்டும் என விரும்பும் கதாநாயகன் ரங்கா, தனது தந்தையின் இறப்பிற்குப் பின்பு தந்தை ஆரம்பித்த உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

இதனால், கப்பல் படையில் அதிகாரியாக வேண்டும் என தனது ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு தனது மாமாவுடன் இணைந்து உணவகத்தை நடத்துகிறார்.

ஆனால், கதாநாயகன் ரங்காவின் மாமா செய்த தவறால் அந்த உணவகம் அவர்களிடம் இருந்து கைமாறி விடுகிறது.

இதனால் தனது சொந்த உணவகத்தில் வேலைக்காரனான ரங்கா, எத்தனை வருடங்கள் ஆனாலும், பிரச்சனைகளை முடித்துவிட்டு தனது உணவகத்தை மீண்டும் சொந்தமாக்க வேண்டும், என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் ரங்காவின் உணவகத்தை கைப்பற்றும் வில்லன் நித்தின் மேத்தா, கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களை நடத்துவதோடு, அதன் மூலம் வரும் வருமானத்தை கதாநாயகன் ரங்கா நடத்திக் கொண்டிருக்கும் உணவகத்தில் வைத்து விநியோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சமயத்தில்,  அந்த பணத்தை கொள்ளையடிக்க மர்ம கும்பல் ஒன்று திட்டம் போடுகிறது.

தனது பணத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பலை வில்லன் நித்தின் மேத்தா, தேடி தேடி கொலை செய்வதோடு, அந்த கும்பலின் தலைவனை பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் கிடைத்த வருமானம் முழுவதையும் உணவகத்தில் வைக்கும் வில்லன், நித்தின் மேத்தா, இருக்கும் பணத்திற்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்றால் உனது உணவகத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், இங்கு நாம் வைத்திருக்கும் பணத்திற்கு எதாவது பிரச்சனை வந்தால் உனது உணவகம் உங்களுக்கு கிடைக்காது, என்று கதாநாயகன் ரங்காவிடம் வில்லன், நித்தின் மேத்தா, கூறிவிடுகிறார்.

வில்லன், நித்தின் மேத்தா, உணவகத்தில் வைக்கும், பணத்தை காப்பாற்றும் பணியில் ஈடுபடும் கதாநாயகன், ரங்கா தனது உணவகத்தை திரும்ப பெற்றாரா?, உணவகத்தை பெறவில்லையா? வில்லன், நித்தின் மேத்தா, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கொள்ளை கும்பலின் தலைவன்
யார்? என்று கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான இந்த‘தென் சென்னை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தென் சென்னை திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ரங்கா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரங்கா, நடிப்பு பயிற்சி பெற்றுவிட்டு கதையின் நாயகனாக நடிக்கலாம்.

வில்லனாக நடித்திருக்கும் நித்தின் மேத்தா, ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரியா, கதாநாயகனின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளங்கோ குமரன், கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுமா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரத்குமார்.எம் ஒளிப்பதிவு மூலம் இரவு நேர காட்சிகள் மிக சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சிவா பத்மயன் மற்றும் ஜென் மார்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள்.

முதல் திரைப்படத்திலேயே நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என மூன்று பணிகளை தூக்கி சுமந்திருக்கும் ரங்கா, மூன்றையும் ஓரளவு சமாளித்திருக்கிறார்.

கதையின் மையக்கருவுடன் பல கிளைக்கதைகளை வைத்துக்கொண்டு சுமாரான திரைக்கதை அமைத்து, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை குழப்பமடையும் விதத்தில் பல விசயங்களை திரைப்படத்தில் திணித்திருக்கிறார்.

இயக்குநர் ரங்கா, தான் சொல்ல வந்த கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்து சொதப்பியிருக்கிறார்.

இயக்குநர் ரங்கா நடிகராகவும் இயக்குநராகவும் பயிற்சி பெற்று அடுத்த இயக்கி நடிக்கும் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி திரைப்படம் அமைக்க வேண்டும்.

மொத்தத்தில், ‘தென் சென்னை’ திரைப்படம் சுமாராக உள்ளது.

error: Content is protected !!