‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா, காலேஷ், தீபா சங்கர்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன்.

ஒளிப்பதிவாளர் :- ஸ்ரீ சரவணன்.

படத்தொகுப்பாளர் :- டேனி சார்லஸ்.

இசையமைப்பாளர் :- கண்ணன் நாராயணன்.

தயாரிப்பு நிறுவனம் :- மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ்.

தயாரிப்பாளர் :-  மலையாள இயக்குநர் ஜியோ பேபி.

ரேட்டிங் :- 3.75/5.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸ்  தனக்குள் காதல் வந்திருப்பதையும் தான் காதலிப்பதையும் தன் தாய் ரோகிணியிடம் கூறுகிறாள்.

தன்னுடைய செல்ல மகள் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் காதலுக்கு மிகவும் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவிப்பதோடு,  காதலனை வீட்டுக்கு அழைத்து வர சொல்லி, கூறுகிறார்.

தன்னுடைய தாயின் விருப்பப்படி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

வீட்டுக்கு அழைத்து வந்த தன் மகளின் காதல் துணையை பார்த்ததும் தாய் ரோகிணி அதிர்ச்சியில் உரைந்துப் போகிறார்.

தனது மகள் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது ஒரு ஆண் மகன் அல்ல, தன் மகள் போன்ற ஒரு பெண்ணைத்தான் காதலிக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸ்க்கு ஏற்பட்டிருக்கும்  பாலினச் சேர்க்கை உணர்வை தன்னுடைய தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்க போகிறேன் என்பதை தன் பாலினச் சேர்க்கை மீதான சமூகத்தின் பார்வை, மற்றும் விவாதங்கள் கேள்விகள், அதற்கு சமூகத்தில உள்ள மக்களின் உணர்வுப்பூர்வமான விளக்கங்கள் மற்றும் விவாதங்கள் என்பதுதான் இந்த  ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த காதல் என்பது பொதுவுடமை திரைப்படத்தில் கதையின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று மிக சிறப்பாகவும் அருமையாகவும் கையாண்டிருக்கிறார்.

ஆணுக்கு பெண் மீது வருவது பெண்ணுக்கு ஆண் மீது வருவது போல் தான் தனது காதலும், என தனது தாய் ரோகினியிடம் வாதிடுவதும், சிறிது நேர இடைவெளி கிடைத்தாலும், தனது காதல் துணையை அரவணைத்து அன்பு செலுத்துவதும், முத்தமிடுவதுமாக மிக மிக கவனமாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காலேஷ் பாலினச் சேர்க்கையாளர்களை இந்த சமுதாயத்தை புரிந்துக் கொண்டு அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க வேண்டும், என்பதை மிக  அழுத்தமாக கதாபாத்திரம் மூலம் பதிவு செய்து மிகவும் பக்குவமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோகிணி தன் மகளின் உணர்வை புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறும்  காட்சிகளில் தனது அனுபவ  நடிப்பை கொடுத்து  அசத்தியிருக்கிறார்.

 கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் இந்த சமூகத்தில், நடக்கும் அனைத்தையும் மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில், தன் மகளிடம் கேள்விகள் மூலம்  விவாதம் செய்து, பெற்றோர்களின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பிரதிபலித்திருக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷா, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத முகமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து திரைப்படம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் வீட்டில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் தீபா சங்கர், தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம், சிறப்பு செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, மூலம் இந்த திரைப்படத்திற்கு சினிமா தளம் இல்லாத ஒளிப்பதிவை கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

தன் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல  உணரவேண்டிய தேவை மனிதர்களின் உணர்ச்சி, என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்

மொத்தத்தில், ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல  உணரவேண்டிய தேவை என்பதை கூறும் சிறந்த படைப்பு.