‘FAMILY படம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள்:-உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயாரோஹணம், சந்தோஷ், ஸ்ரீஜா ரவி, ஆர்ஜே பிரியங்கா, மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், பார்த்திபன் குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- செல்வகுமார் திருமாறன்.
ஒளிப்பதிவாளர் :- மெய்யேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- சுதர்சன்.
இசையமைப்பாளர் :- அனிவீ , அஜேஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- யு கே கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- கே.பாலாஜி.
ரேட்டிங்:- 3.75./5.
திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் கதாநாயகன் உதய கார்த்திக் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என முயற்சிகளில் திரைப்படம் இயக்குவதற்காகவும் பல தயாரிப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய தேடலுக்கான வெற்றியாக ஏற்கனவே திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் கதாநாயகன் உதய் கார்த்திக் திரைப்படம் இயக்க வாய்ப்பு கொடுக்கிறார்.
அந்த மகிழ்ச்சியில் திரைப்படம் இயக்குவதற்கான வேலைகளை தொடங்குகும் கதாநாயகன் உதய் கார்த்திக்கிற்கு சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது திரைப்படம் இயக்கும் வாய்ப்பு பறிக்கப்படுவதோடு, அவருடைய கதையும் சட்ட ரீதியாக பறிக்கப்படுகிறது.
திரைப்படம் இயக்கும் வாய்ப்பு பறிபோனதால் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் கதாநாயகன் உதய் கார்த்திக், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய இரண்டு அண்ணன்கள் மற்றும் தாய் தந்தை அனைவரும் லட்சியத்திற்கு துணையாக களம் இறங்குகிறார்கள்.
தன் குடும்பத்தின் துணையோடும், தான் காதலிக்கும் காதலியின் உதவியுடனும் மீண்டும் தனது நிச்சயமான திரைப்படம் இயக்கும் பணியை நோக்கி பயணிக்கிறார் கதாநாயகன் உதய் கார்த்திக்.
கதாநாயகன் உதய் கார்த்திக் தனது லட்சியமான இயக்குனராக வெற்றி பெற்றாரா? இல்லை வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘ஃபேமிலி படம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஃபேமிலி படம் திரைப்படத்தில் கதாநாயகனாக உதய் கார்த்திக் நடித்திருக்கிறார்.
ஃபேமிலி படம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக் ஏற்கனவே ’டைனோசர்ஸ்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தன் அதிரடி நடிப்பால் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
கதாநாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக் தன்னுடைய லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
சிலஸகுறும்படங்களை இயக்கிய அனுபவத்தோடு, அருமையான கதைகளை வைத்துக்கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு சென்று வாய்ப்பு தேடி அலையும் அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை நம்ப முடியாமல் மகிழ்சியில் மூழ்குவதும், அதே வாய்ப்பு சூழ்ச்சியால் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு பறிபோன பிறகு தடுமாறுவதும் என்று மிகவும் நேர்த்தியான நடிப்பின் மூலம் ஒரு உதவி இயக்குனரின் வலியை ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு தன்னை முழுமையாகவே அர்ப்பணித்துள்ளார்.
இந்த ஃபேமிலி படம் திரைப்படத்தில் கதாநாயகியாக
சுபிக்ஷா காயாரோஹணம், நடித்திருக்கிறார்.
கதாநாயகன் உதய் கார்த்திக் ஜோடியாக நடித்திருக்கும் கதாநாயகி சுபிக்ஷா காயாரோஹணம்,, எளிமையான பணி என்றாலும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகன் உதய் கார்த்திக் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தம்பியின் முயற்சிகளுக்கு துணையாக நிற்கின்ற கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
மற்றொரு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் அருமையாக உள்ளது.
கதாநாயகன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, கதாநாயகனின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
கதாநாயகன் உதய் கார்த்திக் நண்பர், கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷின் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பில் நகைச்சுவை அருமையாக உள்ளது.
நடிகர் சந்தோஷ்ககு தமிழ் திரைப்பட உலகில் மிகவும் சரியான வாய்ப்புகள் அமைந்தால் இவர் நிச்சயம் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருவார்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்திலும் இவருடைய பணி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் அனீவியின் இசை, சுதர்சனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
திரைப்பட ரசிகர்களை எப்படி எல்லாம் ரசிக்க வைக்க முடியும் என்ற வித்தையை சர்வசாதாரணமாக செய்திருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், கமர்ஷியல் மசாலாவை அளவாக பயன்படுத்தி அமர்க்களமான திரைப்படமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒரு எளிமையான கதைக்கருவை அனைத்து மக்களும் ரசிக்கும் படியாக மிக அருமையாக திரைக்கதையாக்கி அனைவரையும் ரசிக்க வைக்கும் திரைப்படமாக தன்னால் இயக்க முடியும் என்பதை இந்த ஃபேமிலி படம் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் செல்வகுமார் திருமாறன், நிரூபித்திருக்கிறார்.
திரைப்படத்துறையில் திரைப்படம் இயக்க வேண்டும் என்று முயற்சியில், தயாரிப்பாளரைத் தேடும் பல உதவி இயக்குநர்கள் எதிர்கொள்ளும், வலிகள், மற்றும் அவமானங்கள் ஆகியவற்றை சொல்லும் பல படங்கள் தமிழ் திரைப்பட உலகில் வெளியாகியிருந்தாலும், அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் துணை நின்று தோள் கொடுத்தால், அவர்கள் எதையும் எளிதாக சாதிக்க முடியும், என்ற கருத்தோடு சொல்வதோடு, அதை ஜாலியாகவும், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இதயம் கனக்கச் செய்யும் குடும்ப செண்டிமெண்டுடன் அருமையாக இயக்கியிருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், எங்களது மூவி வீங்ஸ் இணையதளம் சார்பாக மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
மொத்தத்தில், இந்த ‘ஃபேமிலி படம்’ அனைவரும் கண்டுக்களிக்க கூடிய மிக அருமையான திரைப்படமாக அமைந்திருக்கிறது.











