டாடா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.25/5.

நடிகர் நடிகைகள் :- கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ், ஹரிஷ், எலன், ஃபௌஸி, கமல், பிரதீப், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கணேஷ் கே பாபு.

ஒளிப்பதிவு :- எழிலரசன்.

படத்தொகுப்பு :- கதிரேஷ்
அழகேசன்.

இசை :- ஜென் மார்ட்டின்.

தயாரிப்பு நிறுவனம் :- ஒலிம்பியா மூவீஸ்.

தயாரிப்பாளர்:- எம்.ஆர். அம்பேத் குமார்.

ரேட்டிங் :- 4.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் இது நாள் வரை திரைப்படங்களில் வராத சொல்லப்படாத மிகவும் வித்தியாசமான கதைகளை இருக்கிறதா என தேடித் ஆராய்ந்து பார்த்து திரைப்பட உலகுக்கு வரும் பல புதுமுக இயக்குனர்கள் மிகவும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்..

இந்த டாடா திரைப்படத்தின் கதையும் தமிழ் திரைப்பட உலகில் சொல்லப்படாத ஒரு கதைதான்.

கதையின் மையக்கரு மட்டும் கொஞ்சம் ‘விவகாரமான ஒன்றாக இருந்தாலும் இந்த டாடா திரைப்படத்தை திரைப்படம் ரசிகர்கள் ரசிக்கும்படியாகவும், மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒரே கல்லூரியில் படித்து வரும் கதாநாயகன் கவின் மற்றும் கதாநாயகி அபர்ணா தாஸ் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர்.

அதன் பின்னர் கதாநாயகன் கவின் மற்றும் கதாநாயகி அபர்ணா தாஸ் இருவருடைய காதல் எல்லை மீறி படுக்கை வரை செல்ல கதாநாயகி அபர்ணா தாஸ் கர்ப்பமாகிறார்.

கதாநாயகன் கவின் அந்த கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கதாநாயகி அபர்ணா தாஸ்யிடம் கூற நான் கர்ப்பத்தை கலைக்க மாட்டேன் குழந்தை பெற்றே தீருவேன் என கதாநாயகி அபர்ணா தாஸ் முடிவோடு இருக்கிறார்.

இருவரின் பெற்றோர்கள் இவர்களை காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.

அதன்பின் தனியாக ஒரு வீடு எடுத்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் இருவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

ஒரு நாள் இருவரின் சண்டை அதிகமாக கர்ப்பிணி மனைவியை வீட்டில் தனியாக விட்டுட்டு கதாநாயகன் கவின் விட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார்.

கதாநாயகி அபர்ணா தாஸ்க்கு பிரசவ வலி அதிகரிக்கும் வேலையில் கதாநாயகன் கவினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைக்கிறார்.

தன் மனைவி தொலைபேசி அழைப்பை எடுக்காமல் கதாநாயகன் கவின் தவிர்த்து விடுகிறார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு கதாநாயகி அபர்ணா தாஸ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.

அதன் பின்னர் நடந்த விஷயத்தை அறிந்த கதாநாயகன் கவின் தன் மனைவி கதாநாயகி அபர்ணா தாஸசை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு செல்கிறார்.

அங்கு தனக்கு பிறந்த குழந்தையை விட்டுவிட்டு கதாநாயகி அபர்ணா தாஸ் தனது பெற்றோருடன் சென்றுவிடுகிறார்.

இறுதியில் கதாநாயகன் கவின் தனது குழந்தையை வளர்த்தாரா? வளர்க்கவில்லையா? பிரிந்த தன் மனைவி கதாநாயகி அபர்ணா தாஸ்வுடன் கதாநாயகன் கவின் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் இநத டாடா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டாடா திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் கதாநாயகன் கவின், கல்லூரி மாணவர், காதலன் கணவர் பாசமான தந்தை என பல்வேறு பரிமாணங்களில் அவருடைய அருமையாக நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நெகிழ வைக்கிறார்.
.
நடிப்பின் மூலம் பார்வையாளர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார்.

தமிழ் திரைப்பட உலகில் கவினுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பல திரைப்படங்களில நடித்த நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.

இநத டாடா திரைப்படத்தில் அபர்னா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கதாநாயகி அபர்ணா தாஸ், எதார்த்தமான நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

காதலனை விட்டு பிரிந்த காதலியின் உணர்வுகளை மிக சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

கிளைமாக்ஸ் காட்சியில் திரைப்படம் பார்க்கும் அனைவரையும் அழவைக்கிறார் கதாநாயகி அபர்னா தாஸ்.

கதாநாயகன் கவின் மகனாக மாஸ்டர் இளன் மிகவும் அழகாய் நடித்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் பாக்யராஜ், ஐஸ்வர்யா, வி.டி.வி.கணேஷ், ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

புதுமுக இசையமைப்பாளர்
ஜென் மார்ட்டினுக்கு முதல் திரைப்படத்திலேயே கிடைத்த வாய்ப்பை அவருடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இசை மற்றும் .பாடல்களும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு சாதரண ஒரு வாழ்க்கையை அழகான காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறார்

படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பு பாராட்டுக்குரியது.

சாதாரண கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தி அருமையாக திரைப்படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.

பெற்ற குழந்தையை விட்டு விட்டு தாய் பெற்றோருடன் சென்றுவிடுவது லாஜிக்கல் பிரச்சனை தோன்றுகிறது.

இறுதியில் இதற்கான காரணத்தை வைத்து நியாயப்படுத்தியுள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.

இந்த டாடா திரைப்படத்திற்க்கு பிறகு இயக்குனர் கணேஷ் கே.பாபு தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வர வாழ்த்துக்கள்

மொத்தத்தில் டாடா – திரைப்படம் சிறந்த தரமான தந்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.