‘லெனின் பாண்டியன்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- .டி. பாலச்சந்திரன்.
ஒளிப்பதிவாளர் :- ஏ.எம். எட்வின் சகாய்.
படத்தொகுப்பாளர் :- நாகூரன் ராமச்சந்திரன்.
இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- சத்ய ஜோதி பிலிம்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜுன் தியாகராஜன், ஜி. சரவணன் & சாய் சித்தார்த்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM).
வெளியீட்டு தேதி :- 25 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
சிவகங்கை மானாமதுரை பின்னணியில், மணல் கொள்ளையைச் சுற்றி உருவாகும் அதிகாரத்துக்கு எதிராக சாதாரண மனிதர்கள் போராட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளும் ஒரு வயதான தம்பதியையும், அவர்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் இளம் காவலரையும் உண்மை சம்பவத்தில் அடிப்படையில் கொண்ட கதையாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
போலி என்கவுன்ட்டர்க்கு ஒத்துக் கொள்ளாத ஒரு நேர்மையான லெனின் எனும் இடதுசாரி சிந்தனையுள்ள காவல்துறையை சேர்த்த காவலர் பணியில் இருக்கும் காலத்தில் இறந்துவிட, அந்த காவலர் வேலை அவருடைய மகன் கதாநாயகன் தர்ஷன் கணேசன், கிடைக்கிறது.
ஊருக்குள் நடக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு யாரையும் வழியில் அனுமதிக்காத போது அந்த வழியாக வந்த குடித்துவிட்டு வந்தவர்களால் பிரச்சனை ஏற்பட கதாநாயகன் தர்ஷன் கணேசன் அடித்து சாக்கடையில் தள்ளப்படும் காவலர்கள் மத்தியில் அவமானத்தில் தலை குனியும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
கதாநாயகன் தர்ஷன் கணேசன் பணி புரியும் காவல் நிலையத்தில் வேலையை நியமித்து தினம்தோறும் சல்யூட் அடித்துக் கொண்டே இருக்கும் படியான காவல்துறை ஆய்வாளர் சரவணன் சுப்பையா நூதனமான முறையில் அவமானத்தை தருகின்றார்.
கிராமத்தில் ஆடு மேய்க்கும் கங்கை அமரன், மகளாக நினைத்து வளர்த்துக் கொண்டிருக்கும் ஆடு ஒன்றை மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரி மோதிக் கொன்று விடுகிறார்கள்.
கிராமத்தில் ஆடு மேய்க்கும் கங்கை அமரன், மகளாக நினைத்து வளர்த்துக் கொண்டிருக்கும் ஆட்டை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என காவல்நிலையத்திற்கு செல்ல தோல்வி அடையவே நீதிமன்றத்திற்குச் சென்ற கங்கை அமரனுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பாக கதாநாயகன், கதாநாயகன் தர்ஷன் கணேசன் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்.
கங்கை அமரன், உயிரை கதாநாயகன், கதாநாயகன் தர்ஷன் கணேசன் காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா?, என்பதுதான் இந்த ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக தர்ஷன் கணேசன் நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் கணேசன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற காவல்துறை காவலர் கதாபாத்திரத்தில் கொஞ்சம் பயம் கலந்த கதாபாத்திரத்தில் பொருந்திப் போகும் அளவில் நடிப்பைக்முதல் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் தர்ஷன் கணேசன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷ்ரித்தா ராவ் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜா, அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
துரைராசு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கங்கை அமரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
பீமாராவ் கொண்ணமுத்து நீதிபதி கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான், மிக மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நீதிபதி ஜார்ஜ் மரியான் வரும் நீதிமன்றக் காட்சி ஒன்று, பார்வையாளர்கள் கரவொலியில் திரையரங்கம் அதிரும் வண்ணம் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன், கொடுக்கப்பட்ட கதை புத்தகத்தை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஏ.எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
‘பாண்டி முனி’ பாடல் திரையில் உருவாக்கியிருக்க வேண்டிய மேஜிக்கைச் செய்யத் தவறிவிடுகிறது.
மணல் கொள்ளையை மையமாக வைத்து சமூகப் பிரச்சனையையும், ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன்.
மொத்தத்தில், இந்த ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் மண் மணமும் மனித உணர்வுகளும் திரைப்படத்தை ரசிக்க வைக்கும் நேர்த்தியான படைப்பு!











