’ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா  சாந்தினி பைஜூ , வினோதினி, தீனா, அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- T. ராஜவேல்.

ஒளிப்பதிவாளர் :- M.S. சதீஷ்

படத்தொகுப்பாளர் :- A.நிஷார் ஷரேஃப்.

இசையமைப்பாளர் :-ராஜேஷ் முருகேசன்.

தயாரிப்பு நிறுவனம் :- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்.

தயாரிப்பாளர் :-  நடிகர் சிவகார்த்திகேயன்  – எஸ்.விஜய பிரகாஷ்.

ரேட்டிங் :- 3.5./5.

கதாநாயகன் தர்ஷன் மற்றும் கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வருகிறார்கள்.

கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ தந்தையிடம் முறையாக உங்கள் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என கதாநாயகன் தர்ஷன் கேட்கிறார்.

கதாநாயகன் தர்ஷன் மற்றும் கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ இருவரின் காதலுக்கு கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ தந்தை எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பதிவு திருமணம் செய்து கொண்ட கதாநாயகன் தர்ஷன் மற்றும் கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ஒன்றை வாங்கி அதில் குடியேறுகிறார்கள்.

கதாநாயகன் தர்ஷன் மற்றும் கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில், காளி வெங்கட் அவருடைய மனைவி வினோதினி மற்றும் அவர்களது  மகனுடன் வாழ்ந்து வருகிறார்கள். 

கதாநாயகன் தர்ஷன் மற்றும் கதாநாயகி அர்ஷா சாந்தினி பைஜூ இந்த குடும்பம் வாழ்வது காளி வெங்கட் அவருடைய மனைவி வினோதினி இவர்களுடைய குடும்பத்திற்கு தெரியாது.

இதனால், இரு தரப்பு குடும்பத்திற்கும் இது அமானுஷ்ய சக்தியின் வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் சக்தி இல்லை என்பதும் அறிவியல், என்பதை இருவரின் குடும்பத்தினரும் புரிந்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில், இரு குடும்பத்தினரும் தொடர்ந்து நடக்கும் விசயங்கள், இரு குடும்பத்தினர் சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான சம்பவங்கள் மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எப்படி எல்லாம்  எதிர்கொள்கிறார்கள்.

இப்படி எல்லாம் ஒரு வித்தியாசமான அறிவியலில் சிக்கிக் கொள்வதற்கான காரணம் என்ன?

இந்த அறிவியல் சிக்கலில் இருந்து இரண்டு குடும்பங்களும்  தப்பித்தார்களா?  தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

மற்றொரு கதை நாயகனாக நடித்திருக்கும் காளி வெங்கட், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்.

கதையை நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன், காளி வெங்கட் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அர்ஷா சாந்தினி பைஜூ நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகன் காளி வெங்கட்டின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினி அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் இருவரும் கொடுத்த வேலையை எந்த விதமான குறையில்லாமல் சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

கதையின் நாயகன் தர்ஷன் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பான வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு மூலம் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்.

ஒரே வீடுகளில் அதிகளவில் காட்சிகள் நடந்தாலும், அவர் தனது ஒளிப்பதிவு மூலம் வெவ்வேறு விதத்தில்   காட்சிப்படுத்தி சிறப்பு சேர்த்திருக்கிறார். 

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக பயணித்திருக்கிறார்.

நம்ப முடியாத அளவில் குழப்பமான கதையை யோசித்த இயக்குனர், அதற்கான சிறப்பான திரைக்கதை மற்றும் அருமையான காட்சிகளை வசனங்கள் அறிவியல் அடிப்படையில் அமைத்து, திரைப்படம் பார்த்தும் ரசிகர்களை திரைப்படத்துடன் ஒன்றிவிட செய்து இருக்கிறார் இயக்குநர் டிராஜவேவ். 

மொத்தத்தில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் புரியாத கதையாக அமைந்தாலும் பாராட்ட வேண்டிய சிறப்பான முயற்சி அனைவரும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய திரைப்படம்.

error: Content is protected !!