“கொம்புசீவி” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சண்முக பாண்டியன் விஜயகாந்த்,  சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா, கஜாராஜ், பிரபாகர், ராமச்சந்திரன், இந்துமதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  பொன் ராம்.

ஒளிப்பதிவாளர் :- பாலசுப்பிரமணியெம்.

படத்தொகுப்பாளர் :- தினேஷ் பொன் ராம்.

இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டார் சினிமாஸ்.

தயாரிப்பாளர் :- மகேஷ் த செல்லையா.

ரேட்டிங் :- 3.5./5.

வைகை அணையின் கட்டுமானப் பணிகள் 1948 ஆம் அண்டு தொடங்கி, 1959 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 21, ஜனவரி, 1959 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கே. காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.

வைகை அணை அருகிலுள்ள, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றை தமிழக அரசு  கையகப்படுத்தியது.

இந்த நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள்.

அதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் கஞ்சா கடத்துவது உள்ளிட்ட பல தவறான செயல்களில்  ஈடுபடுகிறார்கள்.

வைகை அணைக்கு அருகிலிருக்கும் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு காட்ஃபாதராக இருக்கிறார்.

தனது தாய் தந்தையை இழந்து தனிமையில் நிற்கும்  கதாநாயகன் சண்முகப் பாண்டியன் சரத்குமாருக்கு உயிரைக் காத்து உதவி செய்கிறார்.

அதன் பிறகு தனது உயிரைக் காப்பாற்றிய கதாநாயகன் சண்முகப் பாண்டியனை சரத்குமார் தன்னுடைய மாப்பிள்ளை ஆக  இணைத்துக் கொள்கிறார்

அதனையடுத்து இருவரும் இணைந்து கஞ்சா கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

பலமுறை கஞ்சா கடத்தல் செய்வதினால் காவல்துறையை காவல்துறை அதிகாரிகளையும் பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையிலிருந்து சரத்குமார் மற்றும் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் அந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்தார்களா? வெளிவரவில்லையா?
என்பதுதான்  ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “கொம்பு சீவி” திரைப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்‌ஷன் நடிப்பு காதல் காட்சிகள் என அனைத்திலும் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியனை பல  காட்சிகளில் பார்த்தால் அவருடைய தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் அப்படியே சண்முக பாண்டியன் இருக்கிறார்.

தன் நடிக்கும்  கதாபாத்திரத்திற்கும் தோற்றத்திற்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தலைமுடி மற்றும் தாடி முழுவதும் நரைத்தது, போன்ற ஒரு கெட்டப்பில் மாமனாக நடித்திருக்கும் சரத்குமார், கதாநாயகன் சண்முக பாண்டியன் இணையாக நடித்திருக்கிறார்.

சரத்குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு இந்த  திரைப்படத்திற்கு மாபெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்த கொம்பு சீவி திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக தார்னியா,
நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிகா, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு  மிடுக்காகவும், எடுப்பாகவும் இருக்கிறார்.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிகா, புடவையில் ரசிகர்களை கூடுதல் கவனம் ஈர்ப்பவர், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மட்டும்  கிடைத்தால், தமிழ் திரைப்பட ரசிகர்களை கிரங்கடித்து விடுவார் என்பது தெரிகிறது.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிகா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் சுஜித் சங்கர், வில்லத்தனம் காட்டி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், லாரி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள்.

சில இடங்களில் சிரிப்பு வந்தாலும் பல இடங்களில், அவர்களது காமெடி கடியாய் கடித்து கொள்ளுகிறார்கள்.

கல்கி ராஜாவின் நடிப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முன்னேற்றம் தரும் நிலையில் இந்த திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

விரைவில் தமிழ் திரைப்பட உலகில் கல்கி ராஜா மிகப்பெரிய நகைச்சுவை நடிகனாக வருவார் என தெரிகிறது.

சரத்குமாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, ராம்ஸ் மற்றும் அனைத்து நடிகர்களும்  கொடுக்கப்பட்ட வேலையை எந்தவித குறையில்லாமல் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதும் பளிச்சென்று கலர்புல்லாக உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள்  மற்றும் பின்னணி இசையில் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், படத்தொகுப்பு மூலம் திரைப்படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் பொன்ராம், வழக்கமான பாணியில் தொடர்ந்து திரைப்படங்களை கொடுத்தாலும், காமெடி என்ற தனது தனித்துவமான பலம் மூலம் திரைப்பட ரசிகர்களை  கவர்ந்து விடுவார்.

வைகை அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நன்மை பயக்கும் அணையாக இருந்தாலும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்து, வழக்கமான கமர்ஷியல் பாணியிலான திரைப்படத்தை  கொடுத்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.

மொத்தத்தில், ‘கொம்பு சீவி’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் கூர்மையாக சீவி இருக்கலாம்.

error: Content is protected !!