சினம் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- அருண் விஜய், பால் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி
ராட்சசன் யாசர், மற்றும் பலர்.

எழுத்து – இயக்கம் :- GNR குமரவேலன்.

ஒளிப்பதிவு :- கோபிநாத்.

படத்தொகுப்பு :- ராஜா முகமது.

இசை :- ஷபீர் தபேரே ஆலம்.

தயாரிப்பு :- மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்.

ரேட்டிங் :- 3.5 / 5.

பெண்கள் மீதான, பாலியல் பலாத்காரம், பெண் குழந்தைகள் கடத்தல் என சமீப காலமாக குற்ற செயல்களை அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணர்வு பற்றிய திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இநத நாட்டில் நடக்கும் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு சாமானிய மக்களும் சினம் கொண்டு போராட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன்.

சென்னையின் புறநகர்ப் பகுதி ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார் கதாநாயகன் அருண் விஜய்.

மனைவி மற்றும் மகளுடன் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணியை நேர்மையாகவும் கன்னியமாகவும் கடமை தவறாதவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார் கதாநாயகன் அருண் விஜய்.

அவருடைய இந்த குணத்தை அவ்வப்போது கிண்டலடிக்கிறார் அதே காவல் நிலையத்தில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர்.

இதனால் கதாநாயகன் அருண் விஜய் மீது எப்போதும் சற்று கோபத்தில் இருக்கிறார்  காவல்துறை ஆய்வாளர்.

ஒரு நாள் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் போது கதாநாயகன் அருண் விஜய்யின் மனைவி கதாநாயகி பாலக் லால்வானி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்யப்பட்ட இவரின் உடலுக்கு அருகில் மற்றொரு ஆணின் உடல் இருப்பதால் அந்த வழக்கை ‘கள்ளக் காதல்’ என வழக்கு பதிவு செய்கிறார் காவல்துறை ஆய்வாளர்.

இதனால் கோபமடையும் கதாநாயகன் அருண் விஜய்க்கும் அந்த காவல்துறை ஆய்வாளருக்கும் மோதல் ஏற்பட ஆய்வாளரை கதாநாயகன் அருண் விஜய் தாக்கி அவருடைய கையை உடைக்கும் அளவிற்கு மோதல் ஏற்படுகிறது.

இந்த மோதலால் கதாநாயகன் அருண் விஜய் பணியில் இருந்து பணி விடை நீக்கம்  செய்யப்படுகிறார்.

உண்மை தெரிந்து அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்து உனது மனைவியின் கொலை செய்யப்பட்ட  வழக்கை விசாரிக்கச் சொல்கிறார் மேலதிகாரி.

பிறகு மீண்டும் பணிக்கு சென்று தன் மனைவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை தேடித்தேடி வழக்கை விசாரிக்கிறார்.

கொலைக்கான காரணத்தை கதாநாயகன் அருண் விஜய் கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த கொலைக்கான உண்மை காரணம் என்ன? யார் இந்த கொலையை நிகழ்த்துகிறார்கள்? அந்த இறந்துப்போன மற்ற நபருக்கும் கதாநாயகன் அருண் விஜய் மனைவிக்கும் இறந்துப்போன மற்ற நபருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் இந்த சினம் திரைப்படத்தின் மீதிகதை.

இந்த சினம் திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்துள்ளார்

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் எப்போதுமே கதாநாயகன் அருண் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும்.

காவல் துறை அதிகாரியாக வரும் கதாநாயகன் அருண் விஜய் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

கடமை தவறாத, கன்னியமான நேர்மையான அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

காதல் மனைவி பாலக் லால்வானி கொலை செய்யப்பட்ட சோகம் ஒரு பக்கம், மனைவி மீதான அவப் பெயரைத் துடைக்க வேண்டும் என துடிக்கும் கோபம் ஒரு பக்கம் என அன்பான கணவனாகவும், தந்தையாகவும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அருண் விஜய்யின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி பாலக் லால்வானி சில காட்சிகளே வந்தாலும் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார்.

ஏட்டையாவாக நடித்திருக்கும் காளி வெங்கட் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் பெறுகிறார்.

இரவு நேரக் காட்சிகள் திரைப்படத்தில் அதிகம் இடம் பெற்றிருப்பதால் கோபிநாத்தின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்குரிய ஒளிப்பதிவு திரைப்படத்தில் உள்ளது.

ஷபீர் பின்னணி இசை தேவையான இடங்களில் பரபரப்பைக் கூட்டுகிறது.

ஷபீர் இசை திரைப்படத்தில் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

ராஜா முகமதின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல் அதிரடியான காவல்துறை அதிகாரி என காட்டாமல் இயல்பான ஒரு காவல்துறை அதிகாரியாக அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.

காவல்துறை பற்றிய திரைப்படம் என்றாலே ஒரு கமர்ஷியல் திரைப்படமாக அதிரடி ஆக்ஷன் திரைப்படமாகத்தான் மற்ற இயக்குனர்கள் கொடுப்பார்கள்.

ஆனால், இந்த சினம் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் சென்டிமென்ட்டான ஒரு நல்ல திரைப்படமாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் நினைத்து இருக்கிறார்.

சற்று வித்யாசம் நிறைந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அருமையான திரைக்கதையை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.

கடைசியில் கதாநாயகன் அருண் விஜய் எடுக்கும் முடிவு சரியா, தவறா என்பதை மீறி அப்படித்தான் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என திரைப்படம் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு கோபத்தை வரவழைத்து விடுகிறது.

மொத்தத்தில் சினம் திரைப்படம் ஒவ்வொருவருக்கும் சினம் தேவை.