ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- தமன் ஆகாஷ்ன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், யாசர், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நாகலைட்டுகள் நிவேதிதா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி. மணிவர்மன்.
ஒளிப்பதிவாளர் :- கே ஜி.
படத்தொகுப்பாளர் :- எஸ். குரு சூரியா.
இசையமைப்பாளர் :- சஞ்சய் மாணிக்கம்.
தயாரிப்பு நிறுவனம் :- அமோஹோம் ஸ்டுடியோஸ், வைட்லேம்ப் பிச்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- சுபாஷினி கே.
ரேட்டிங் :- 3./5.
ஒரு நொடி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியான பாராட்டை வெற்றியை தொடர்ந்து நடிகர் தமன் ஆகாஷ் மற்றும் இயக்குனர் ரவிவர்மாவுடன் இணைந்து ஜென்ம நட்சத்திரம் மூலம் மீண்டும் இணைந்து உள்ளார்கள்.
இந்த ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் 1991 காலகட்டங்களில் இதே பெயரில் இயக்குநர் தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த திகில் நிறைந்த திரைப்படம்.
கதாநாயகன் தமன் மற்றும் கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா இருவருக்கும் திருமணம் நடந்து கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக இருக்கிறார்.
கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா இரவு தூங்கும் நேரங்களில் அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, மட்டுமல்லாமல் சில அமானுஷ்யமான பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து செல்கிறது.
எம்எல்ஏவின் உதவியாளராக இருக்கும் காளி வெங்கட் தனது குழந்தைக்கு மருத்துவ செலவிற்கு 40 லட்சம் தேவைப்படுவதால் எம்எல்ஏ சென்று கேட்க தனக்கு குழந்தை பற்றி தப்பாக பேசி விடுகிறார்.
இந்த நிலையில் எம்எல்ஏவின் பணத்தை கையாடல் செய்ததாக காளி வெங்கட் எம்எல்ஏவின் ஆட்கள் கொலை செய்ய பல வெட்டுக்காயுடன் தப்பித்து சென்று விடுகிறார்.
காளி வெங்கட் பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக காளி வெங்கட் கதாநாயகன் தமனின் நண்பர்களிடம் அந்த தகவலை தெரிவித்து விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது பெண் குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார்.
பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுப்பதற்காக கதாநாயகன், தமன் மற்றும் கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த பாழடைந்த தொழிற்சாலைக்கு செல்ல, கதாநாயகி மால்வி மல்ஹோத்ரா தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த பாழடைந்த தொழிற்சாலையில் பார்க்கிறார்.
அதே சமயத்தில், பணத்தை தேடும் கதாநாயகன் தமன் அந்த இடத்தில் சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடயங்களை கண்டுபிடிக்க, அந்த பணத்தை தேடும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
கதாநாயகன் தமனின் மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு?,
கதாநாயகன் தமன் தன்னுடைய நண்பர்கள் ஆபத்தில் இருந்து காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த ’ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தமன் ஆகாஷ்ன், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் தமன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் தமன் இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படத்தை ஒற்றை ஆளாக தனது தோளில் சுமந்திருக்கிறார்கள்.
கதாநாயகன் தமன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா கொடுத்த வேலையை எந்த விதமான குறையில்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாநாயகி மால்வி மல்ஹோத்ராவின், கெட்ட கனவுகளால் எப்போதும் பயந்தபடியே காணும் அமானுஷ்ய சம்பவங்களை தைரியமாக எதிர்கொண்டு உண்மையை கண்டுபிடிக்கும்
கதாநாயகன் தமனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.
காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு கொடுத்து திரை இருப்பு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.
டாக்டர் கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தான பாரதி, மற்றும் நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் என ஒரு சில காட்சிகளில் முகம் காட்டியிருப்பவர்களும் தங்களது பணியை மிகப்பெரிய அளவில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி, ஒளிப்பதிவு மூலம் பாழடைந்த தொழிற்சாலையில் நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்கள் மிரளும் வகையில் லைட்டிங் படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் கதைக்கு திகில் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பயத்தை இசையின் மூலம் மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் அருமையான் திரைக்கதையை சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? பணத்துக்கு ஆசைப்பட்டு உயிர் இழப்பு என மிகவும் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் பி.மணிவர்மன்,
மொத்தத்தில், ‘ஜென்ம நட்சத்திரம்’ சிறந்த திகில் திரைப்படம் .











