“இந்திரா” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார், குமார், சுமேஷ் மூர், கஜராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சபரிஷ் நந்தா.
ஒளிப்பதிவாளர் :- பிரபு ராகவ்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் கே.எல்.
இசையமைப்பாளர் :- அஜ்மல் தஹ்சீன்.
தயாரிப்பு நிறுவனம் :- மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் :- ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்.
ரேட்டிங் 3.5./5.
காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் வசந்த் ரவி அதிகளவில் குடி வழக்கத்திற்கு அடிமையாகி பணியில் இருக்கும் போது விபத்து ஏற்படுத்திய காரணத்தால் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டு தினந்தோறும் குடித்துக் கொண்டே இருக்கும் கதாநாயகன் வசந்த் ரவி அந்த குடிபழக்கத்தால் கண் பார்வை பறிபோகிறது.
மேலும் கதாநாயகன் வசந்த் ரவியின் மனைவி கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடா இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு இருவரும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கண் பார்வையை இழந்த பின் மாற்று அறுவை சிகிச்சைக்காக கதாநாயகன் வசந்த ரவியின் பார்வை இழப்பு கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடா இருவரையும் நெருக்கமாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை சிட்டிக்குள் ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கொலை செய்து கொண்டிருக்கும் சைக்கோ கொலையாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையினருக்கு சரியான அளவில் துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் தடுமாற, திடீரென்று அதே போல் கதாநாயகன் வசந்த் ரவியின் மனைவி கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடாவும், வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிட்ட நிலையில் வீட்டுக்குள் கொலை செய்யப்படுகிறார்.
கதாநாயகன் வசந்த் ரவியின் மனைவி கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடாவும் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விசாரணை நடத்தும் காவல் துறையினர் வெளியாட்கள் யாரும் அடுக்குமாடி குடியிருப்பில் வரவில்லை என்பதை உறுதிப் படுத்துவதோடு, வீட்டில் உள்பக்கமாக தாளிட்ட வீட்டுக்குள் நடந்த கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடா கொலையில் காவல்துறையினர் குழப்பம் அடைகிறார்கள்..
அதே நேரத்தில், கண் பார்வை இல்லாத கதாநாயகன் வசந்த் ரவி மீதும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
ஆனால், கதாநாயகன் வசந்த் ரவி தன் கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடா கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்க, காவல்துறையில் பணிபுரியும் தனது நண்பரின் உதவியோடு கொலைகாரனை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
கண் பார்வை இல்லாத கதாநாயகன் வசந்த் ரவி பல கொலைகளை செய்து அந்த சைக்கோ கொலையாளியை கண்டு பிடித்தாரா?, சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கவில்லையா?
கதாநாயகன் வசந்த் ரவியின் முன்பக்கம் தாழ்பால் போடப்பட்ட நிலையில், வெளியாட்கள் யாரும் வராத முடியாத நிலையில் கதாநாயகன் வசந்த் ரவியின் மனைவி கதாநாயகி மெஹ்ரீன் பிர்சாடா எப்படி கொல்லப்பட்டார் ? என்பதுதான் இந்த ‘இந்திரா’. திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்திரா திரைப்படத்தில் கதாநாயகனாக வசந்த் ரவி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஓவரான நடிப்பாக அல்லாமல் அளவாக நடித்திருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
கண் பார்வை இல்லாதவராக மிகவும் கனக்கச்சிதமாக நடித்திருப்பவர், தன்னுடைய மனைவி இறப்புக்குப் பின் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
பல காட்சிகளில் அதிகளவில் கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சூழல் இருந்தாலும், அதை சரியான முறையில் அளவாக நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம், பாராட்டு பெருகிறார்.
இந்திரா திரைப்படத்தில் கதாநாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா தன் கணவர் கதாநாயகன் வசந்த் ரவி சரியில்லாத போக்கைப் பார்த்து கோபம் கொள்வதும், அதன்பிறகு தன்னுடைய கணவருக்காக கலங்குவதும் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து தொடர்ந்து கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லர் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில், தான் செய்யும் கொலைகளை கொண்டாடும் விதமும், மகிழ்ச்சியில் சிரிக்கும் விதமும் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பீதியடைய வைத்திருக்கிறார்.
அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
தன்னுடைய காதலி அனிகா சுரேந்தர் மரணத்தை தன் கண்ணெதிரே காணும்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கும் சுமேஷ் மூரின் இக்கட்டான நிலையை கண்களிலேயே நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மலையாள நடிகர் சுமேஷ் மூரின் கதாபாத்திரம் திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது உள்ளது.
கதாநாயகன் வசந்த் ரவியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் குமார், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் ஒளிப்பதிவு மூலம் கிரைம் திரில்லர் திரைக்கதையில் உள்ள பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகளை திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கும் காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
சைக்கோ கொலையை பற்றி கதைக்களமாக கொண்டு மிக அருமையாக திரைக்கதை அமைத்திருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மர்ம முடிச்சோடு திரைப்படத்தை மிக சுவாரஸ்யமாக எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சபரிஷ் நந்தா
மொத்தத்தில், ‘இந்திரா’ இருக்கையின் நுனியில் பதற்றத்துடன் அமர வைக்கும் மிகவும் வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்.











