மெட்ராஸ் மேட்னி திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா, விஜய் டிவி ராமர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கார்த்திகேயன் மணி.
ஒளிப்பதிவாளர் :- ஆனந்த் ஜி. கே.
படத்தொகுப்பாளர் :- சதீஷ் குமார் சமுஸ்கி.
இசையமைப்பாளர் :- கே.சி. பாலசாரங்கன்.
தயாரிப்பு நிறுவனம் :- மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாமஸன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ.
ரேட்டிங் :- 3.75./5
சென்னையில், கதாநாயகன் காளி வெங்கட் மனைவி ஷெல்லி கிஷோர், மகள் ரோஷ்னி மற்றும் மகன் விஷ்வா ஆட்டோ ஓட்டிக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் காளி வெங்கட் மகள் ரோஷ்னி நன்றாக படித்து பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கதாநாயகன் காளி வெங்கடின் மகன் 12 ஆம் வகுப்பில் நல்லதொரு மதிப்பெண் எடுத்து இன்ஞ்சினியரீங் படிப்பில் சேருவதற்கு தயாராகி வருகிறார்.
கதாநாயகன் காளி வெங்கட் மகள் ரோஷ்னிக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார்.
ஆனால், மகள் ரோஷ்னிக்கு எந்தவொரு மாப்பிள்ளையும் கிடைக்காமல் திருமணம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது.
கதாநாயகன் காளி வெங்கடின் குடும்ப கஷ்டத்தை மகள் ரோஷ்னி மீது திணித்ததால்தான் இப்படி தனது மகள் ரோஷ்னி மனதளவில் தவித்துக் கொண்டிருக்கிறாள் என கதாநாயகன் காளி வெங்கட். நினைத்து கவலை படுகிறார்.
தன்னுடைய தந்தை அனைவரிடமும் மிகவும் தாழ்ந்து போவதையும் பேசுவதையும் பணிவாக நடந்து கொள்வதையும் பிடிக்காத கதாநாயகன் காளி வெங்கடின் மகன் விஷ்வா, தந்தை மீது அதிக கோபத்தில் இருந்து வருகிறான்.
தன்னுடைய குடும்பத்தில் என்ன நடந்தாலும், தன் குடும்பத்தை தாங்கிச் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் ஷெல்லி இருக்கிறார்.
இதன் பின் இவர்களின் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இந்த “மெட்ராஸ் மேட்னி” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “மெட்ராஸ் மேட்னி” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் மிகவும் இயல்பான எதார்த்தமான நடிப்பை கொடுத்து அக்கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் திரைப்படம் பார்க்கும் அனைவருடைய கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இப்படியொரு கதாபாத்திரத்திற்கு நடிகர் காளி வெங்கடை விட்டால் வேறு எந்த நடிகரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் கச்சிதமாக அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
கதாநாயகன் காளி வெங்கட்டின் மனைவியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெல்லியும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.
கதாநாயகன் காளி வெங்கட்டின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அவருடன் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார்.
கதாநாயகன் காளி வெங்கட்டின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், தந்தையை புரிந்து கொள்ளும் தருணம் என பல காட்சிகளில் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதாகைலாசம், இவரின் உதவியாளராக வரும் விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, ஊறுகாய் விற்கும் சாம்ஸ், HR ஆக வரும் அர்ச்சனா, ட்ரைவிங் கற்றுத் தரும் ஜார்ஜ் மரியன், EB அலுவலர் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்த மெட்ராஸ் மேட்டனி திரைப்படத்தில் சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே திரைப்படத்திற்கு மிகவும் இடைஞ்சலாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே.வின் ஒளிப்பதிவு நம்மை கதையின் உலகத்திற்குள் கூட்டிச் சென்று கண்ணெதிரில் நடப்பது போல் உள்ளது.
இசையமைப்பாளர் :- கே.சி. பாலசாரங்கன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
ஒரு எளியவனின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவருடைய குடும்பத்தை இயல்பு மாறாமல் எடுத்து அனைவருக்குமே தங்களின் குடும்பத்தின் மீது இன்னும் அளவு கடந்த அன்பை கொடுக்க வைப்பதற்கு இந்தத் திரைப்படம் மிக உறுதுணையாக இருக்கும்.
கதாநாயகன் காளி வெங்கட் மற்றும் அவரை மட்டுமே சுற்றி நடக்கும் அவரது வாழ்வியல் என இவற்றை மட்டுமே காட்டியிருக்கலாம்.
சத்யராஜின் கதாபாத்திரம் இதனாலே, முதல் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்ந்து நம்மை சற்று சோதித்துவிட்டது.
இரண்டாம் பாதியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்த இயக்குனர் கார்த்திகேயன் மணி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் – மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஒரு குடும்ப தலைவனின் பாசம்.











