ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, கனிகா, ஷான், கல்கி, பவித்ரா லக்ஷ்மி, அஞ்சலி நாயர், PGS, அரோல் டி சங்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரசாத் முருகன்.

ஒளிப்பதிவாளர் :- கே.எஸ். காளிதாஸ் & கண்ணா.R.

படத்தொகுப்பாளர் :- ஷான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- ஜோஸ் பிராங்க்ளின்.

தயாரிப்பு நிறுவனம் :- ஃப்ரைடே பிலிம் பேக்டரி, ட்ரீம் ஹவுஸ், பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கேப்டன் M.P. ஆனந்த், ஹாரூன், P. G. சரவணன்.

ரேட்டிங்:- 3.5./5.

 

ஆந்தாலஜி போல நான்கு கதை அந்த கதையின் ஒரு கை துப்பாக்கி கிடைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்படத்தின் கதை.

முன்னாள் ரவுடியான கதாநாயகன் பரத் தன் மனைவி அறிவுரைப்படி ஆட்டோ டிரைவராக கதாநாயகன் பரத், காதல் மனைவிக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்றால் 15 லட்ச ரூபாய் தேவைப்படும் பணத்திற்காக அழைத்து கொண்டிருக்கும் நிலையில் அந்த நேரத்தில் கதாநாயகன் பரத்திடம் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது

இதனை தொடர்ந்து கதாநாயகன் பரத் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தனது காதல் மனைவி உயிரை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? கதாநாயகன் பரத்திடம் கிடைத்த துப்பாக்கியால் என்ன நடந்தது என்பதுதான் முதல் கதையின் மீதிக்கதை.

மாநகராட்சி துப்புரவு பணியாளரான அபிராமி மற்றும் ஒரே ஒரு மகன் கார்த்திக்யை எப்படியாதவது மகனை டாக்டராக ஆக்கவேண்டும் வேண்டுமென ஆசைப்படுகிறார்.

தனக்கு பிறந்த ஒரே ஒரு மகன் கார்த்திக் திருநங்கையாக மாறி விடுகிறான்.

கந்து வட்டிக்கு கொடுப்பவரிடம் கடன் வாங்கி தன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்கிறார்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவரால் அபிராமிக்கும் அவருடைய மகனுக்கும் கார்த்திக்கும் மிகப்பெரிய அளவில் பிரச்சனை வருகிறது.

இதனையடுத்து அபிராமியிடம ஒரு கைத்துப்பாக்கி ஒன்று கிடைக்க அபிராமிக்கு அந்த கயிறு துப்பாக்கியால் ஏதாவது பிரச்சனை ஏதாவது வந்ததா? வரவில்லையா? என்பதுதான் இந்த இரண்டாவது கதையின் மீதிக்கதை.

படித்து பெரிய வேலையில் சேர்ந்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படும் அஞ்சலி நாயருக்கு அவருடைய தந்தை திடீர் திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

தன் தந்தை கூறியதால் தனது தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் அஞ்சலி நாயர் புகுந்த வீட்டில் அவருடைய மாமனார் மாமியார் இருவரும் தனது சொந்த மகள் போல் மிகவும் பாசமாக கவனித்துக் கொள்கின்றனர்.

அஞ்சலி நாயருக்கு திருமணம் முடிந்து முதலிரவு முடிந்த பிறகு, அதற்கு அடுத்தநாள் கணவன் அஞ்சலி நாயருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட மறுத்துவிடுகிறார்.

இந்த நிலையில் அஞ்சலி நாயர் திடீர் என கர்ப்பமடைந்து விடுகிறார்.

ஆனால், அஞ்சலி நாயரின் கர்ப்பத்திற்கு தன் கணவன் காரணம் அல்ல, என்ற உண்மை தெரிய வருகிறது. .

இதனையடுத்து அஞ்சலி நாயர் எடுத்த முடிவு என்ன ? என்பதுதான் மூன்றாவது கதையின் மீதிக்கதை.

ஒரு பத்திரிக்கை நடத்துவரும் தலைவாசல் விஜய் மிகப்பெரிய அளவில் சாதி வெறி பிடித்தவர் அவருடைய மகள் பவித்ரா லட்சுமி, வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்து வருகிறார்.

இந்த பவித்ரா லட்சுமி காதல் விவகாரம் தலைவாசல் விஜய்க்கு தெரியவர, பவித்ரா லட்சுமியை கண்டிக்கிறார்.

ஒரு கட்டத்தில் பவித்ரா லட்சுமி காதலித்தவரை பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார்

இந்த பதிவு திருமணத்தை அறிந்த தலைவாசல் விஜய், திருமணத்தை நிறுத்த நினைக்கையில் தனது காரில் பின்பக்கம் உள்ள சீட்டில் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.

இறுதியில் தலைவாசல் விஜய் தனக்கு கிடைத்த துப்பாக்கியை வைத்து என்ன முடிவு எடுத்தார்.

தனது மகள் பவித்ரா லட்சுமியின் பதிவு திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? நிறுத்தவில்லையா? என்பதுதான் நான்காவது கதையின் மீதிக்கதை.

இந்த நான்கு கதைகளுக்கும் கருவாக இருக்கும் துப்பாக்கி இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்பதுதான் இந்த’ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இரண்டு கிட்னியும் செயல் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது காதல் மனைவியை காப்பாற்ற மருத்துவ செலவிற்காக பணம் தேவைப்பட பணத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் பரத், தனது அவல நிலையை வெளிப்படுத்தும் போது இதயத்தை கனக்கச் செய்து விடுகிறார்.

தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக தேவைப்படும் பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர், தனக்குத் தேவைப்படும் அந்த பணம் தன் கண்முன் இருக்கும் போது, அது தனக்கு வேண்டும், என்பதை தன் கண்கள் மூலமாகவும், முக பாவனைகள் மூலமாக மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்.

மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி, தனது மகன் மனதளவில் பெண்ணாக மாறி திருநங்கையாக, மாறிய தனது மகனை மிகவும் அன்பாக அரவணித்து பாசம் காட்டுவதோடு, அவர் நன்றாக டாக்டருக்கு படிக்க வேண்டும், என்ற ஆசையோடு பல காட்சிகளில் மிகவும் இயல்பாகவும் கனகச்சிதமாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கைதட்டல் பெறுகிறார்.

தன் தந்தையின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துக் கொள்ளும் அஞ்சலி நாயர், அதே தந்தை சொன்ன வார்த்தைக்காக தனக்கு எதிராக நடந்த சதி வலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையில், தன் அதிரடி நடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் கொடுப்பவர், தனது அழகு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நடிப்பின் மூலம் கவர்ந்திழுக்கவும் செய்திருக்கிறார்.

ஷான், கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான்,  பி.ஜி.எஸ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள்  கே.எஸ். காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருந்தாலும், ஒளிப்பதிவிலும் இரவு நேர காட்சி லைட்டிங்கிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமையாக அமைந்திருக்கிறது.

துப்பாக்கி ஒன்றை மட்டுமே கதையின் கருவாக வைத்துக் கொண்டு சமூக அக்கறையோடு மிக அருமையான திரைக்கதையை அமைத்து மிக அருமையாக இருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன்.

மொத்தத்தில், இந்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை பயணம்.

error: Content is protected !!