மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் ரேட்டிங்:- 3.25 /5.

நடிகர் & நடிகைகள் :- வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணிய சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன், ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி, சந்திரா சுட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தயாள் பத்மநாபன்.

ஒளிப்பதிவு :- சேகர் சந்திரா.

படத்தொகுப்பு :-  ப்ரீத்தி-பாபு.

இசை :- மணிகாந்த் கத்ரி.

தயாரிப்பு நிறுவனம் :-  டி பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- தயாள் பத்மநாபன்.

ரேட்டிங் :- 3.25./ 5.

கன்னட திரைப்பட உலகில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் தயாள் பத்மநாபன், ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது தமிழ் திரைப்படமாக க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் இயக்கியிருக்கிறார்.

இந்த ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் ஆஹா ஒரிஜினல் ஒடிடி தளத்தில் மே 18ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

மற்றொரு ஒரு காவல் நிலையத்தில் இருந்து மாருதி நகர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக மாற்றலாகி பணியாற்றி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது சிறு வயது நண்பர்கள் சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால் ஆகியோருடன் சேர்ந்து மாருதி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ் மற்றும் பிரபல ரவுடி சுப்பிரமணிய சிவாவையும் கொலை செய்ய நால்வரும் திட்டம் திட்டுகிறார்கள்.

ஆனால், நால்வரும் போட்ட திட்டத்திற்கு திடீரென்று மிகப் பெரிய இடையூறு ஏற்படுகிறது.

இடையூறுகளை சமாளித்து தன் திட்டிய திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக வரலட்சுமி சரத்குமார் காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நால்வர் போட்ட திட்டத்தின்படி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ் கொலை செய்யப்படுவதோடு, அவரை சந்திக்க வந்த பிரபல ரவுடி சுப்பிரமணிய சிவாவும் கொலை செய்யப்படுகிறார்.

நால்வர் போட்ட திட்டத்தின்படி இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ் பிரபல ரவுடி சுப்பிரமணிய சிவாவும் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டிருந்தாலும், அதை செய்தது யார்? என வரலட்சுமி சரத்குமார் குழப்பமடைய, மறுபக்கம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கை விசாரிப்பதற்கு உயர் காவல்துறை அதிகாரியான ஆரவ் நியமிக்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாரும், அவரது நண்பர்களும் இன்ஸ்பெக்டர் மற்றும் பிரபல ரவுடி சுப்பிரமணி சிவாவையும் கொலை செய்ய திட்டம் தீட்டியது எதற்காக? உயர் காவல்துறை அதிகாரியான ஆரவின் விசாரணையில் குற்றவாளி சிக்கினாரா? சிக்கவில்லையா? என்பதுதான் இந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ஆரவின் கம்பீரமாக உடல அமைப்பு, நடிப்பிலும் கம்பீரத்தை நடிப்பை வெளிப்படுத்தி அருமையாக அசத்தியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகன் என்றால் அது ஆரவ்தான் அவரே இடைவேளையின் போதுதான் கதைக்குள் வருகிறார்.

உயர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஆரவ் மிக அருமையாக கையாண்ட விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

நல்ல நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்தால் நிச்சயமாக ஆக்‌ஷன் கதாநாயகனாக தமிழ் திரைப்பட உலகில் நிரந்தர இடத்தை பிடிக்க கூடிய தகுதி ஆரவுக்கு இருக்கிறது.

இந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் மிகவும் அருமையாக அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பதோடு, அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தினாலும், அந்த கதாபாத்திரத்திற்கான வலிமை இந்த திரைப்படத்தில் இல்லை உண்மை.

நல்ல நல்ல திரைப்படங்களில் மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு இயக்குநர் தயாள் பத்மநாபன் பல்லாயிரம் கோடி நன்றிகள் கூறினாலும் பத்தாது.

இந்தத் திரைப்படத்தில் மஹத் ராகவேந்திரா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அமித் பார்கவ் மிகவும் அருமையாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குனர் சுப்பிரமணிய சிவா அந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் விவேக் ராஜகோபாலன், யாசர் என திரைப்படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பாளர் ப்ரீத்தி பாபுவின் படத்தொகுப்பு விறுவிறுப்புக்கு ஏற்றவாறு அருமையாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரி இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணித்திருப்பதோடு காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சாதாரண கதையை வைத்து கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என கதை மற்றும் திரைக்கதையை அமைத்த இயக்குநர் தயாள் பதமநாபன்  நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில், இந்த ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த திரைப்படம்.