பருந்தாகுது ஊர் குருவி ரேட்டிங் :- 3.25/5.

நடிகர் & நடிகைகள் :- நிஷாந்த் ருஸ்ஸோ, விவேக் பிரசன்னா, காயத்திரி ஐயர், வினோத் சாகர், கோடாங்கி வடிவேல், கௌதம், ராஜேஷ், ஆனந்த், அதிக், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தனபாலன் கோவிந்தராஜ்,

ஒளிப்பதிவு :- அஸ்வின் நோயல்.

படத்தொகுப்பு :-  நெல்சன் ஆண்டனி,

இசை :- ரஞ்சித் உன்னி.

தயாரிப்பு நிறுவனம் :-  லைட்ஸ் ஆன் மீடியா.

தயாரிப்பாளர் :- ஈவ் சுரேஷ் – சுந்தரா கிருஷ்ணா – பி/வெங்கி சந்திரசேகர்.

ரேட்டிங் :- 3.25 / 5

சின்ன சின்ன திருட்டுகள் பிட்பக்கெட் அடிப்பது அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் நிஷாந்த் ருஸ்ஸோ.

ஒரு நாள் நிஷாந்த் ருஸ்ஸோ காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்றிருந்தபோது அதே சமயத்தில், மிளகுக்காட்டில் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டதாக குற்றவாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைகிறார்கள்.

காவல் துறை துணை ஆய்வாளராக இருக்கும் கோடாங்கி வடிவேலு நிஷாந்த் ருஸ்ஸோ அந்த கொலை நடந்த இடத்திற்கு வழிகாட்டச் சொல்லி இழுத்துக் கொண்டு செல்கிறார்.

வழிகாட்டி கூட்டி செல்லும் நிஷாந்தை ருஸ்ஸோ அங்கே சென்றவுடன், நிஷாந்த் ருஸ்ஸோவின் கையுடன் கொலை செய்யப்பட்ட இறந்து கிடக்கும் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை இறந்த பிணத்தை பார்த்துக் கொள்ளுமாறு, காவல் துறை துணை ஆய்வாளர் கோடாங்கி வடிவேலு கூறுகிறார்.

கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபர் திடிரென உயிருடன் எழுந்துக் கொள்கிறார்.

இறந்து கிடந்தவரின் தொலைபேசியில் யாரோ ஒரு பெண் இறந்து கிடக்கும் விவேக் பிரசன்னாவை காப்பாற்றும் படி கெஞ்சி கேட்கிறார்.

அதன்பிறகு விவேக் பிரசன்னாவை காப்பாற்ற முயற்சிக்கும்போது அவரை கொலை செய்த முயற்சி செய்த கொலையாளிகள் அந்த இடத்திற்கு வந்து விடுகின்றார்கள்.

இறுதியில் அந்த கொலைகார கும்பலிடம் இருந்து நிஷாந்த் ருஸ்ஸோ விவேக் பிரசன்னாவை காப்பாற்றுகிறாரா? காப்பாற்றப்படவில்லையா? எதனால் விவேக் பிரசன்னாவை எதற்காக கொலை செய்வதற்கு துரத்துகிறார்கள்? என்பதுதான் இநத பருந்தாகுது ஊர் குருவி
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பருந்தாகும் ஊர் குருவி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார்.

இந்த மருந்தாகும் ஊர் குருவி திரைப்படத்தை தாங்கி பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.

விவேக் பிரசன்னா கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்கிறார்.

தனது உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் விவேக் பிரசன்னா நாம் ஓடுவதற்கு காரணம் தனது மனைவி தான் என தெரிந்தவுடன் அவரின் நடிப்பு மிக மிக அருமை.

இந்தத் திரைப்படத்தில் காயத்ரி ஐயரின் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

நடிகை என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறார்.

தனது கணவனை கொலை செய்யும் அளவிற்கு துணிந்த இவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பு சிறப்பு.

நிஷாந்த் ருஸ்ஸோ இவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விவேக் பிரசன்னாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என நினைக்கும் இவர் பணத்திற்காக காப்பாற்ற ஒத்துக் கொண்ட இவர் கடைசியில் மனிதாபிமானத்துடன் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என நடிப்பு பல பரிமாணங்களை காட்டிவிடுகிறார்.

நிஷாந்த் ருஸ்ஸோ எதார்த்த நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

ராட்சசன் வினோத் சாகர் காவல்துறை ஆய்வாளராக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

வினோத் சாகர் ஒரு காட்சியில் மலையாளி ஒருவர் சந்திக்க வரும்போது மலையாளத்தில் பேசி திரைப்படம் பார்க்கும் நம்மை கேரளாவிற்கு டிக்கெட் இல்லாமல் அழைத்து செல்கிறார்.

வினோத் சாகரின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அஸ்வின் நோயல் காட்டில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் இரவில் நடப்பது போன்ற காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ரஞ்சித் உன்னியின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

பாடல்கள் மனதில் பதியும்படி இல்லை என்றாலும் கேட்கும் ரகமாக உள்ளது.

திரைப்படத்தின் முதல் காட்சியில் மூலம் பார்வையாளர்களை பயமுறுத்துகிறார் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ்,.

வித்யாசமான கதையை யோசித்த இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ், திரைப்படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்திருக்கலாம்.

திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ், என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் பருந்தாகுது ஊர்க்குருவி – பார்க்கலாம்.