D3 திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.25. / 5.

நடிகர் நடிகைகள் :- பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, காயத்ரி யுவராஜ், ஆனந்தி, ராகுல்மாதவ், மேத்யூ வர்கீஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி.

ஒளிப்பதிவு :- மணிகண்டன் பிகே.

படத்தொகுப்பு :- ராஜா.

இசை :- ஸ்ரீஜித் எடவானா.

தயாரிப்பு நிறுவனம் :- பீமாஸ் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்:- மனோஜ்.

ரேட்டிங் :- 2.25. / 5.

மருத்துவ மாஃபியா உடல் உறுப்புகளை திருடும் மருத்துவர்கள் நாட்டு மருத்துவமனைகள் பற்றிய கதைகள் நமது தமிழ் திரைப்பட உலகில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கிறது.

அப்படி வந்திருக்கும் மற்றொரு திரைப்படம்தான் D3.

காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் பிரஜீன் பணிமாற்றம் பெற்று தன் மனைவி வித்யா ப்ரிதீப்புடன் குற்றாலத்தில் உள்ள டி3 காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்கிறார்

D3 காவல் நிலையம் லிமிட்டில் ஒரு இளம்பெண் லாரி மோதி விபத்துக்குள்ளாகி மரணமடைகிறாள்.

இந்த வழக்கை விசாரிக்கும் கதாநாயகன் பிரஜீனுக்கு, தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், நூற்றுக்கணக்கான விபத்துகள் நடந்தது தெரியவருகிறது.

அதன் பிறகு ஒட்டுமொத்தமாக சாலை விபத்துக்கள் நடந்த பழைய வழக்குகளையும் தூசி கட்ட ஆரம்பிக்கிறார் கதாநாயகன் பிரஜீன்.

அந்த விபத்தின் மீதும் கதாநாயகன் ப்ரஜினுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.

இரு விபத்திற்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை பல விபத்துகளில் ஒற்றுமை இருப்பதை கண்டுபிடிக்கிறார் கதாநாயகன் பிரஜீன்.

இப்படிப்பட்ட விபத்துகளை நடத்தும் குற்றவாளி யார் என நெருங்குவதற்கு முன்பு கதாநாயகன் ப்ரஜினின் மனைவி வித்யா ப்ரதீப்பையும் குற்றவாளிகள் கொலை செய்து விடுகின்றனர்.

தனது மனைவி வித்யா பிரதிப்பை விபத்தில் கொலை செய்தது யார் இந்த கொலைகளை என் செய்கிறார்கள்? எதற்காக செய்கின்றனர்.? பல விபத்துகளை அரங்கேற்றிய கொலைகாரன் யார் என்பதை கதாநாயகன் ப்ரஜின் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த D3 திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த டி3 திரைப்படத்தில் கதாநாயகனாக பிரஜீன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பிரஜீன் காவல்துறை அதிகாரியாக மிக சிறப்பாக நடித்து உள்ளார்.

காவல் அதிகாரியாக கறார் இருப்பது, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராடுவது, தனது மனைவி மரணத்தைக் கண்டு அலறுவது என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

அதே போல வில்லனாக வரும் ராகுல் மாதவ் அசத்தல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வித்யா பிரதீப் ஒரு சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.கே.மணிகண்டனின் மிகவும் அருமையான ஒளிப்பதிவிற்க்கு பாராட்டுகள்.

இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா இசை மற்றும் பின்னணி இசையும் அருமையாக உள்ளது.

ஆபாச, ரத்தக்களறி காட்சிகள் இன்றி, அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லரை தர முடியும் என்பதை நிரூபித்து உள்ளார் இயக்குநர் பாலாஜி.

மொத்தத்தில் D3 திரைப்படம் பார்க்கலாம்.