கொன்றால் பாவம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5. / 5.

நடிகர் நடிகைகள் :- சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ், சென்ட்ராயன், சுப்ரமணிய சிவா, டைகர் தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், மீசை ராஜேந்திரன்,கவிதா பாரதி யாசர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தயாள் பத்மநாபன்.

ஒளிப்பதிவு :- செழியன் ISC.

படத்தொகுப்பு :- பிரீத்தி மோகன் பாபு.

இசை :- சாம் சிஎஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஈன்ஃபாக் ஸ்டுடியோஸ் & டி பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்:- பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார்.ஏ.

ரேட்டிங் :- 3.5. / 5.

1915ஆம் ஆண்டு ரூபர்ட் ப்ரூக் என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில ஓரங்க நாடகம் 1980-களில் கன்னடத்தில் அரங்கேற்றப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் இந்த ‘ஆ கரால ராத்திரி’ என்ற திரைப்படம் ஏற்கனவே கன்னட திரைப்பட உலகில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படம் கன்னட மொழியில் தேசிய விருதையும் வென்றுள்ளது.

தெலுங்கு திரைப்பட உலகிலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தெலுங்கு கன்னடம் தமிழ் ஆகிய அனைத்து மொழிகளிலும் இயக்குனர் தயாள் பத்மநாபனே இந்த கொன்றால் பாவம் கதையை இயக்கியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரைப்பட உலகிலும் கன்னட திரைப்படமான ‘ஆ கரால ராத்திரி’ என்ற இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு இன்று கொன்றால் பாவம் என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒதுக்குப்புறமான தந்தை சார்லி, தாய் ஈஸ்வரி ராவ் மகள் வரலட்சுமி சரத்குமார் மூவரும் வீடு ஒன்றில் வசித்து வருகிறார்கள்.

தனது பெற்றோருக்கு கடன் தொல்லை அதிகமானதால் சொந்தமான தன் நிலத்தை விற்றுவிட்டு அதே நிலத்தில் தினக்கூலிகளாக வேலை பார்க்கிறார்கள்.

தன் குடும்பம் வறுமையில் உள்ள காரணத்தால் தனக்குத் திருமணம் நடக்கவில்லை என்ற ஏக்கம் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் இருக்கிறது.

இந்தச் சூழலில் பத்திரிகையாளர் வேலையை உதறி தள்ளிவிட்டு ஊர் ஊராகச் சுற்றும் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் வீட்டில் ஓர் இரவு தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்.

கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் குடும்பம் ஆரம்பத்தில் தயக்கத்திற்கு பின்பு ஒப்புக் கொள்கிறார்கள்.

கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் நிறைய பணமும் நகைகளும் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவனைக் கொன்று விட்டு அதை எடுத்துக் கொள்ள கதாநாயகி வரலட்சுமி சரத்குமார். திட்டமிடுகிறாள்.

கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரின் முடிவுக்கு தன தாய் தந்தையை ஒத்துக்கொள்ள வைக்கிறாள்.

இறுதியில் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் யார்? அவரை கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் கொலை செய்தாரை? செய்யவில்லையா? கதாநாயகி வரலட்சுமி சரத்குமாரின் குடும்பத்துக்கு என்ன ஆகிறது? என்பதுதான் இந்த கொன்றால் பாவம் திரைப்படத்தின்
மீதிக் கதை.

இநத கொன்றால் பாவம் திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் ஒரு மிடுக்கான இளைஞனாக மின்னுகிறார்.

பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்.

இந்த கொன்றால் பாவம் திரைப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.

ஒரு முதிர் கன்னியின் கோபத்தையும், ஏக்கத்தையும் மிக பிரமாதமாக நடித்து காட்டியுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

இந்த திரைப்படத்தில் அச்சு அசலாக ஒரு கிராமத்து பெண்ணாகவும் கண்முன் நிற்கிறார்.  .

ஒரு பக்கம் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

குடிகார தந்தையாக சார்லி வழக்கம் போல அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளார்.

தாயாக ஈஸ்வரி ராவிற்கு இது ஒரு நல்ல கதாபாத்திரம் அதை உணர்ந்து தனது முழு நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

இவர்களை தவிர டைகர் தங்கதுரை, மனோபாலா, பார்வையற்றவராக வரும் சென்றாயன், காவலராக வரும் கவிதாபாரதி, சாராயக் கடை முதலாளியாக வரும் சுப்ரமணிய சிவா மற்றும் எஸ்ஆர் சீனிவாசன், மீசை ராஜேந்திரன், யாசர், ஓரிரு காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்லும் நடிகர்கள் மனதில் பதிகின்றனர்.

கொன்றால் பாவம் திரைப்படத்தை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தான் எடுத்து செல்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் செழியனின் அற்புதமான ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கதை நடக்கும் காலத்துக்கும் களத்துக்கும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடத்திச் சென்றுவிடுகிறது ஒளிப்பதிவாளர் செழியன்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை இரண்டாம் பாதியில் தேவையான பதட்டத்தைக் கூட்ட மிகப்பெரிய உதவியாக உள்ளது.

கதைப் போக்கில் ஒலிக்கும் பாடல்கள் ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றன.

ஆசை மற்றும் பேராசை அதிகமானால் மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை இந்த கொன்றால் பாவம் திரைப்படத்தின் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர் தயால் பத்மநாபன்.

ஒரு மனிதனுக்கு பேராசை வந்து விட்டால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அழகான திரைக்கதையின் மூலம் எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் தயால் பத்மநாபன்.

கொன்றால் பாவம் – திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.