மைக்கேல் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.25 / 5.

நடிகர் நடிகைகள் :- சந்தீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி, அனுசுயா, வருண் சதீஷ், அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா, மற்றும் பலர்‌

எழுத்து & இயக்கம் :- ரஞ்சித் ஜெயக்கொடி.

ஒளிப்பதிவு :- கிரண் கௌஷிக்.

படத்தொகுப்பு :- சத்திய நாராயணன்.

இசை :- ஷாம் சி எஸ் ‌

தயாரிப்பு நிறுவனம் :- கரண் சி புரடெக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்.

தயாரிப்பாளர்:- பாரத் சவுத்ரி.

ரேட்டிங் :- 2.25 / 5

தமிழ் திரைப்பட உலகில் இதற்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் `புரியாத புதிர்` மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில்`இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்` ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இந்த மைக்கேல் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் 2017ஆம் வருடம் வெளியான `மாநகரம்` திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஏற்கனவே அறிமுகமாகிய நடிகர் சந்தீப் கிஷன் மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் தற்போது ஆக்‌ஷன் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார்.

தன் தாயை எமாற்றிய தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு செல்கிறான் கதாநாயகன் சந்தீப் கிஷன்‌

ஒருவழியாக தன் தந்தையை தேடி கண்டுபிடித்து விடுகிறான கதாநாயகன் சந்தீப் கிஷன்.

மும்பையின் மிகப்பெரிய கேங்ஸ்டர் தலைவனாக கவுதம் வாசுதேவ் மேனன் வலம் வருகிறார்.

அப்போது கையில் கத்தியுடன் ஒருவர் கவுதம் வாசுதேவ் மேனனை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

மிகப்பெரிய கேங்ஸ்டருக்கு தலைவனாக இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனை கொலை செய்ய வரும் அந்த நபரிடம் இருந்து கதாநாயகன் சந்தீப் கிஷன் காப்பாற்றுகிறார்.

இதனால் கேங்ஸ்டர் தலைவனாக இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனை நெருக்கமாகும் கதாநாயகன் சந்தீப் கிஷன், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியா ஒன்றையும் பார்த்துக் கொள்கிறார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை தீர்த்துக் கட்ட கவுதம் வாசுதேவ் மேனன் முடிவெடுக்கிறார்.

அதன்படி ஒரு தகவல் கிடைக்க, கொலை செய்ய திட்டமிட்ட நபரின் மகளை கண்டு பிடிக்கிறார்.

அந்த நபரையும் அவருடைய மகளையும் கொலை செய்வதற்காக கதாநாயகன் சந்தீப் கிஷன் கவுதம் வாசுதேவ் மேனன் அனுப்பி வைக்கிறார்.

சென்ற இடத்தில் அந்த நபரிடம் இருந்து கதாநாயகன் சந்தீப் கிஷனுக்கும் அந்த பெண்ணுடன் காதல் மலர, இருவரும் நெருங்கி பழகுகிறார்கள்..

அந்த பெண்ணையும், அவரின் தந்தையையும் கதாநாயகன் சந்தீப் கிஷன் இருவரையும் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறார்.

இருவரும் காதலிக்கும் விஷயம் கவுதம் வாசுதேவ் மேனன், தெரிந்துவிட கதாநாயகன் சந்திப் கிஷன் மீது கோபமடைந்து தீர்த்துக் கட்ட முடிவெடுத்து விடுகிறார்.

இறுதியில் கௌதம் வாசுதேவன் மேனன் இடம் இருந்து கதாநாயகன் சந்திப் கிஷன் தப்பித்தாரா? தப்பிக்க வில்லையா? என்பதுதான் இநத மைக்கேல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மைக்கேல் திரைப்படத்தில் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துள்ளார்.

சந்தீப் கிஷன் இநத மைக்கேல் திரைப்படத்திற்காக முழுமையாக உழைப்பை கொடுத்துள்ளார்.

சண்டை காட்சிகளில் சந்தீப் கிஷன் உழைப்பு பாராட்டும்படி உள்ளது.

தன் காதலி மற்றும் தனது காதலையும் காப்பாற்ற நினைக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார் கதாநாயகன் சந்தீப் கிஷன்.

இநத மைக்கேல் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யன்ஷா கௌசிக் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா கௌசிக், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.

இந்த மைக்கேல் திரைப்படத்தில்
வில்லனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனன் தனி கவனம் பெறுகிறார்.

மாஸ் காட்சிகளில் மிகப்பெரிய டானாகவே கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் மாறியுள்ளார்.

இநத திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி இந்த கதைக்கு பலமாக அமைந்துள்ளார்.

திரைப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

மேலும் அய்யப்பா பி. ஷர்மா, அனுஷ்யா பரத்வாஜ் மற்றும் திரைப்படத்தில் வரும் பலரும் அவர்களின் பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

ஷாம் சி எஸ் இசை மற்றும் பின்னணி இசை பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் இல்லை.

90 காலக்கட்டத்தை ஒளிப்பதிவின் மூலம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் ‌ ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக்.

தமிழ் திரைப்பட உலகில் தோன்றிய பழைய பாணி கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

ஆக்‌ஷன் திரைப்படம் என்பதால் காட்சிகளுக்கு காட்சி ஆக்‌ஷனாக அமைக்கப்பட்டு முகம் சுழிக்க வைக்கிறது.

திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் மைக்கேல் – திரைப்படம் பழைய கதையை புதுமை படுத்து இருக்கிறார்கள்.