லத்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.5 / 5.
நடிகர் நடிகைகள் :- விஷால்,ரமணா, சுனைனா, தலைவாசல் விஜய், பிரபு, ராஜ்கபூர், சூப்பர் குட் சுப்பிரமணி, வினோத் சாகர், மோகன் ராம், முனிஸ்காந்த், மிஷா கோஷல், வினோதினி வைத்தியநாதன், சன்னி பி என், எ.வெங்கடேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஏ. வினோத் குமார்.
ஒளிப்பதிவு :- பாலசுப்ரமணியெம்.
படத்தொகுப்பு :- ஸ்ரீகாந்த்.
இசை :- யுவன் ஷங்கர் ராஜா.
தயாரிப்பு :- ராணா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- நடிகர் ரமணா நடிகர் நந்தா.
ரேட்டிங் :- 3.5 / 5.
தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவு காவல்துறையை பற்றிய வழக்கமான திரைப்படங்களில் இருப்பதையே காட்டாமல் லத்தி திரைப்படத்தை வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எ.வினோத் குமார்.
லத்தி திரைப்படத்தில் கார்கள், பைக்குகளில் வந்து சீன் காட்டும் கதாநாயகனாக நடிகர் விஷால் வரவில்லை.
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் இதே போல் ஒரு காட்சி இருக்கிறது.
அந்த காட்சியில் கூட்டத்தை சமாளிப்பதற்காக மிகப்பெரிய ஒரு பீரங்கி வைத்து கூட்டத்தை சமாளித்தார்.
அதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை சமாளிப்பதற்கு காவல்துறையினர் பயன்படுத்தும் லத்தியை வைத்து கொண்டு மிகப்பெரிய கூட்டத்தை நடிகர் விஷால் சமாளித்திருக்கிறார்.
லத்தி திரைப்படத்தில் வித்தியாசமான முறையில் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் காவல்துறைக்கு ஒரு வத்தி மட்டும் போதும் என இந்த லத்தி திரைப்படத்தில் இயக்குனர் எவினோத்குமார் கூறியிருக்கிறார்.
சென்னை நீலாங்கரையில் கான்ஸ்டெபிலாக பணிபுரியும் கதாநாயகன் விஷால் அவருடைய மனைவி சுனைனா மற்றும் தனது செல்ல மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு இளம் பெண் இரவு நேரத்தில் நீலாங்கரை காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் கான்ஸ்டபிள் கதாநாயகன் விஷாலிடம் ஒரு இளைஞர் தன்னை காதலிக்க சொல்லி பல நாட்களாக டார்ச்சர் செய்வதாக அவன் மீது புகார் கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.
அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று அவரின் தந்தையிடம் எச்சரித்து விட்டு வருகிறார் கதாநாயகன் விஷால்.
அதன் பின் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுகிறார்.
உடனடியாக அந்த இளம் பெண்ணை காதலிக்க சொல்லி டார்ச்சர் கொடுத்த இளைஞரை கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைத்து வைத்து லத்தி ஸ்பெஷலிஸ்ட் கதாநாயகன் விஷால் வெளுத்து வாங்குகிறார்.
அந்த இளைஞர் அந்த இளம் பெண்ணை கொலை செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.
அந்த இளைஞரை விசாரிக்காமல் லாக்கப்பில் வைத்து அடித்து விடுகிறார் கதாநாயகன் விஷால்.
அந்த இளைஞனை லாக்கப்பில் அடைத்து வைத்து அடித்த விவகாரம் மனித உரிமை ஆணையத்திற்கு சென்றதால் கதாநாயகன் விஷாலை ஒரு ஆண்டு அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
அதன்பின் காவல்துறை உயர் அதிகாரியின் நண்பரான தலைவாசல் விஜய் டிஜிபியாக இருக்கும் பிரபுவிடம் கதாநாயகன் விஷாலை பற்றி கூறுகிறார்.
டிஜிபி பிரபுவின் சிபாரிசின் மூலம் சில மாதங்களில் மீண்டும் அதே நீலாங்கரை காவல் நிலையத்தில் வேலையில் சேர்ந்துவிடுகிறார் கதாநாயகன் விஷால்.
டிஜிபி பிரபுவின் மகளிடம் பிரபல தாதா சூறாவின் மகன் ரமணா தகாத முறையில் நடந்துக் கொள்கிறார்.
டி.ஜி.பியாக இருந்தும் பிரபல தாதா சூறாவின் மகனை பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த சமயத்தில் பாரில் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது டிஜிபி பிரபுவிடம் பிரபல தாதா சூறாவின் மகன் ரமணா சிக்கிக்கொள்கிறார்.
பிரபல தாதா சூறாவின் மகன் ரமணாவை அடித்து நடக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பதற்காக லத்தி ஜார்ஜ் ஸ்பெஷலிஸ்ட் கதாநாயகன் விஷாலை வரவைக்கிறார் டிஜிபி பிரபு.
கதாநாயகன் விஷால் பிரபல தாதா சூறாவின் மகன் ரமணாவை வெளுத்து வாங்கி விடுகிறார்.
இதனால் கோபமடையும் ரமணா, கதாநாயகன் விஷாலை கொல்ல துடிக்கிறார்.
இறுதியில் ரமணா, கதாநாயகன் விஷாலை கொலை செய்தாரா? செய்யவில்லையா? மிகப்பெரிய தாதாவிடம் இருந்து கதாநாயகன் விஷால் எப்படி தப்பித்தார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்திருக்கிறார்
கதாநாயகன் விஷால் முழு கதையும் தாங்கி நிற்கிறார்.
கதாநாயகன் விஷால் மிகவும் எதார்த்தமான நடிப்பையும், வில்லன்களை எதிர்க்கும் போது ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகளில் அருமையான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் மகனை தேடி அலையும் போது நெகிழ வைத்து இருக்கிறார்.
கதாநாயகியாக வரும் சுனைனா கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.
நடிகர் ரமணா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
பழிவாங்க துடிக்கும் காட்சிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார் வில்லன் ரமணா.
வில்லன் ரமணாவை இந்த லத்தி திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்பட உலகம் வில்லனாக தூக்கி வைத்து கொண்டாடும்.
வில்லன் ரமணாவின் தந்தையாக நடித்து இருக்கும் மலையாள நடிகர் சன்னி, வில்லன் சுறா கதாபாத்திரத்திற்கு பொருந்த வில்லை என்றாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்..
வில்லன் சன்னி வலது கையாக வரும் ராட்சசன் திரைப்படத்தின் நடித்த வினோத் சாகர், அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களை விட பின்னணி இசையே திரைப்படத்தில் அதிகம் மேலோங்கி நிற்கிறது.
ஸ்டண்ட் காட்சிகளை இயக்கிய பீட்டர் ஹேயினுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை கூறலாம்.
ஒளிப்பதிவாளர் பால சுப்ரமணியம் மற்றும் பால கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
அவ்வளவு பெரிய கட்டிடத்தில் கேமராவை சுழல விட்டிருப்பது மிகவும் சிறப்பு.
காவல்துறையில் இருக்கும் கான்ஸ்டபிள் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் எ.வினோத் குமார்.
மெதுவாக குடும்பம் குழந்தை என நகரும் திரைக்கதை போகப்போக வேகம் எடுக்கிறது.
முதல் பாதி தேடுதல் வேட்டையும், இரண்டாம் பாதியில் அடிதடி ஆக்ஷன் வேட்டையும் நடத்தி இருக்கிறார் அறிமுக இயக்குனர் எ.வினோத் குமார்.
ரொமான்ஸ், காமெடி இல்லாமல் திரைக்கதை அமைத்து இருப்பது இயக்குனரை பாராட்டலாம்..
இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சியின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
மொத்தத்தில் ‘லத்தி’ – திரைப்படம் புதுவிதமான லத்தி சார்ஜ்.