நான் மிருகமாய் மாற திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75/5

நடிகர் நடிகைகள் :- M சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த், அப்பனி சரத், மதுசூதன ராவ், சூப்பர் குட் கண்ணன், KSG வெங்கடேஷ், துளசி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சத்யசிவா.

ஒளிப்பதிவு :- ராஜா பட்டச்சார்ஜி.

படத்தொகுப்பு :- ஸ்ரீகாந்த் NP.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.

தயாரிப்பு நிறுவனம் :- செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்.

தயாரிப்பாளர் :- TD ராஜா – TR சஞ்சய் குமார்.

ரேட்டிங் :- 1.75 / 5

 

தமிழ் திரைப்பட உலகில், எத்தனையோ பழி வாங்கும் கதைகள் உள்ள திரைப்படம்கள் திரைப்பட ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இயக்குனர் சத்ய சிவா இப்படி ஒரு திரைப்படத்தையும் ரத்த வெறி பிடித்த கதையைக் கொடுத்து தமிழ் திரைப்பட உலகில் பின்னோக்கி சென்றுவிட்டார்.

‘கழுகு, திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சத்ய சிவாவா இது என ஆச்சரியமாக உள்ளது.

இப்படி கதைக்களம் உள்ள ரத்த வெறி பிடித்த திரைப்படத்தை நாம் பார்த்ததில்லை அப்படி ஒரு திரைப்படம்தான் நான் மிருகமாய் மாற.

திரைப்படத் துறையில் சவுண்ட் இன்ஜினியரான கதாநாயகன் சசிகுமார் வேலை பார்த்து வருகிறார்.

கதாநாயகன் சசிகுமார் தனது குடும்பத்தில் தம்பி தங்கை தாய் தந்தை மனைவி மகள் என மிகவும்  ஆனந்தமான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.

மிகப்பெரிய தொழில் அதிபர் மதுசூதன ராவை கொல்ல செய்வதற்கு  கோடிக்கணக்கில் கூலிப்படையினரிடம் பேரம் பேசப்பட்டு கொலை செய்வதற்கு கூலிப்படையினர் திட்டம் தீட்டுகிறார்கள்.

இதனிடையில் தம்பியை தொடர்பு கொள்ளும் கதாநாயகன் சசிகுமாரிடம் சிறிது நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறி தம்பி பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் சசிகுமாரை கூட்டி வருவதற்காக செல்லும் தம்பி, வரும் வழியில் கூலிப்படையை சேர்ந்த சில ரவுடிகள் சேர்ந்து தொழில் அதிபர் மதுசூதன ராவை கொலை செய்ய பயங்கரமான  வெட்டுகிறார்கள்.

வெட்டப்பட்டு காயங்களுடன் மதுசூதன ராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கதாநாயகன் சசிக்குமாரின் தம்பி சேர்த்து விடுகிறார்.

தொழில் அதிபர் மதுசூதனராவை கொலை செய்ய போது கதாநாயகன் சசிகுமாரின் தம்பி காப்பாற்றியதால் கோபத்தின் உச்சிக்கு செல்லும் கூலிப்படையை சேர்ந்த ரவுடிகள் வெட்டுப்பட்ட தொழிலதிபர் மதுசூதனராவை அனுமதித்த மருத்துவமனையை பற்றி கேட்கிறார்கள்.

இதனை தெரிவிக்க மறுக்கும் கதாநாயகன் சசிகுமாரின் தம்பியை கூலிப்படையை சேர்ந்த ரவுடிகள் வெட்டி கொலை செய்கின்றனர்.

தனது கண் முன்னே தம்பியை  கூலி படையை சேர்ந்த ரவுடிகள் கொலை செய்து விடுவதை பார்க்கும் கதாநாயகன் சசிகுமார் இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கூலி படையை சேர்ந்த ரவுடிகளை பழிக்கு பழி  வாங்க தொடங்குகிறார்.

இறுதியில் தனது தம்பியை கொலை செய்தவர்களை கதாநாயகன் சசிகுமார் பழிக்கு பழிதீர்த்தாரா? தீர்க்கவில்லையா? கூலிப்படையினரிடம் இருந்து தனது குடும்பத்தை எப்படி கதாநாயகன் சசிகுமார் காப்பாற்றினார்? என்பதுதான் இந்த நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத நான் மிருகமாய் மாற திரைப்படத்தில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பூமிநாதன் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை.

திரைப்படத்தின் பூமிநாதன் கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் சசிகுமாரின் நடிப்பில் உணர்வு கொஞ்சம் கூட இல்லை.

நடிக்கத் தெரியாத ஒரு புதுமுகம் நடிகர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது சசிக்குமாரின் நடிப்பு.

அழுகை, விரக்தி, இயலாமை, கோபம் என அனைத்திலும் ஒரே மாதிரியான அந்த முகத்தில் தென்படுகிறது.

இதனால் சசிகுமாரின் கதாப்பாத்திரம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் ஒன்றினையவில்லை.

வில்லனாக வரும் விக்ராந்த் நடித்துள்ளார்

அவருக்கு யார் டப்பிங் குரல் கொடுத்தார்களோ?

இந்த நான் மிருகமாய் மாற திரைப்படத்தில் கதாநாயகியாக ஹரிப்ரியா நடித்துள்ளார்.

கதாநாயகியாக வரும் ஹரிப்ரியா அழுகிற காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகி தேவை என்பதால் மட்டுமே ஹரிப்பிரியாவை நடிக்க வைத்துள்ளனர்.

அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் எதார்த்ததிற்கு மாறாக உள்ளதால் ரசிக்கும்படியாக இல்லை.

இயக்குனர் சத்யசிவா நினைத்தது போன்று நடிப்பை வெளிப்படுத்த முடியாததால் இந்த நடிகர்களிடம் ஒழுங்காக வேலை வாங்கவில்லை என்ற எண்ணம் தோன்ற வைக்கிறது.

பாடல்கள் இல்லாத திரைப்படம் என்றாலும் இயற்கையான சத்தத்தை மழை சாரல் மட்டுமே ஒலிக்க வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரத்தம் வாடையே ஒரு கட்டத்தில் ரத்தம் கேமராவை தாண்டியும் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் முகத்தில் தெளிப்பது போன்று உள்ளது.

இந்த நான் மிருகமாய் மாற திரைப்படத்தை திரையரங்களுக்கு பார்க்க சென்றால் ரத்தத்தில் குளித்துவிட்டு வரலாம்

மொத்தத்தில் நான் மிருகமாய் மாற – இப்படி ஒரு திரைப்படம் எடுக்காமல் இருந்திருக்கலாம்.