நடிகர் விஷாலின் சென்சார் போர்டு குற்றச்சாட்டுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உடனடி பதில்!
நடிகர் விஷாலின் சென்சார் போர்டு குற்றச்சாட்டுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உடனடி பதில்!
சென்னை 29 செப்டம்பர் 2023 தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று 29 செப்டம்பர் 2023 உடனடியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம், இதுவரை ரூபாய்.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ‘மார்க் ஆண்டனி’
திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழில் இந்த திரைப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நேற்று இந்தியில் வெளியாகியது
இந்த நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தினை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு (CBFC) லஞ்சம் வாங்கி உள்ளதாக நடிகர் விஷால் நேற்று 28 செப்டம்பர் 2023 மாலை பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இது குறித்து அவர் தனது “X” பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திரைத்துறையில்தான் நான் ஊழலைப் பார்த்துள்ளேன்.
நிஜத்தில் நடந்துள்ளது.
இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அரசு அலுவலகமான, மும்பை சென்சார் போர்டு அலுவலகத்தில் ‘மார்க் ஆண்டனி’ இந்தி பதிப்பை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்கின்றனர்.
3 லட்சம் திரைப்படத்தை இந்தியில் திரையிடவும், 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்கின்றனர்.
எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை.
எங்களுக்கு வேறு வழியில்லை. ஏராளமானோருக்குப் பங்கு செல்கிறது.
இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்
மேலும், “இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து மும்பை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று (செப்.29) மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், மும்பை திரைப்பட தணிக்கை (CBFC) அலுவலகத்தினால் யாரும் பாதிக்கப்பட்டால் அவர் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களது புகார்களை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The issue of corruption in CBFC brought forth by actor @VishalKOfficial is extremely unfortunate.
The Government has zero tolerance for corruption and strictest action will be taken against anyone found involved. A senior officer from the Ministry of Information & Broadcasting…
— Ministry of Information and Broadcasting (@MIB_India) September 29, 2023











