Monday, September 27
Shadow

நடிகை ஆண்ட்ரியாவை அதிகமாகவே கஷ்டப்படுத்தி விட்டேன் பிரபல இயக்குனர் வருத்தம்.

சென்னை 04 ஜூன் 2021நடிகை ஆண்ட்ரியாவை அதிகமாகவே கஷ்டப்படுத்தி விட்டேன் பிரபல இயக்குனர் வருத்தம்.

தமிழ் திரைப்பட உலகில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா பிரபல இயக்குனர் ஒருவர் கஷ்டப்படுத்தி இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு லிரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு திரைப்படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியிருப்பதாவது…

பிசாசு திரைப்படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர்.

அதுபோல இந்த திரைப்படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு திரைப்படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.

நடிகை ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான திரைப்படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.

நான் அவரை மிக அதிகமாக கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம்.

இது பெரியவர்களுக்கான திகில் படம்தான்.

திரைபபடம் பயமுறுத்தத்தான் செய்யும் என்றார்.

CLOSE
CLOSE