நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை 31 மே 2021

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே மிச்சமுள்ளது.

இந்தக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கவுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அஜித்குமார் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முன்னணி பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

உடனடியாகக் காவல்துறையினர் விசாரணையில் இறங்கி, சம்பந்தப்பட்ட நபரை விசாரித்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.

இன்று (31 மே 2021) மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித்குமார் வீடு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

உடனே காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நடிகர் அஜித்குமார் வசிக்கும் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பாக கிழக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று அஜித்குமார் வீடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்துத் தேடியபோது வழக்கமாக மிரட்டல் விடுக்கக்கூடிய மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.

புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

ஏற்கெனவே முதல்வர் எடாபாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!