ரூ.31 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்.

சென்னை 30 மே 2021

ரூ.31 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்.

பாலிவுட் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மும்பையில் ரூபாய்.31 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கி உள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி இருக்கிறார்.

இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும்.

இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது.

இந்த வீட்டின் பத்திரப்பதிவு கடந்த மாதம் 12-ந் தேதி செய்யப்பட்டது.

இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார்.

அவருக்கு ஏற்கனவே நான்கு பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

error: Content is protected !!