கன்னடத் திரைப்பட உலகில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவிற்கு நடிகர் அஜித் குமார், இரங்கல்.
சென்னை 30 அக்டோபர் 2021
கன்னடத் திரைப்பட உலகில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவிற்கு நடிகர் அஜித் குமார், இரங்கல்.
கன்னடத் திரைப்பட உலகில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவிற்கு நடிகர் அஜித் குமார், இரங்கல் செய்தியை தனது மேனேஜர் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
நேற்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடத்துக்கு) உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வழக்கம் போல நேற்று காலை ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடத்துக்கு) சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது புனித் ராஜ்குமாருக்கு அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
முதலில் லேசான வலி வந்தபோது அவர் சீரியசாக எடுக்கவில்லையாம்.
அதன்பின்னர் வலி அதிகரித்த நிலையில் தான் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் தான் இருந்தாராம்.
அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இன்று மதியம் 2.00 மணியளவில் தான், புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனால் கர்நாடகமே பதட்டமானது.
பெங்களூர் மங்களூர் மைசூரு உள்ளிட்ட நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு
144 போடப்பட்டுள்ளது.
நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கிறார்.
அதில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன்.
அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Condolence msg from Mr Ajith kumar.
Saddened to hear the unfortunate demise of Shri Puneeth kumar ji, may his family and friends gain strength to over come this grief.
Ajith kumar and Shalini Ajith kumar .— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2021











