சண்டை காட்சியில் நடிக்கும் போதுகாயம் அடைந்த நடிகை மாளவிகா மோகனன்
சென்னை 30 நவம்பர் 2021
சண்டை காட்சியில் நடிக்கும் போதுகாயம் அடைந்த நடிகை மாளவிகா மோகனன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன.
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.
அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.











