பிரபல நடிகர் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து

தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீப். இவர் கன்னடத்தில் தயாராகும் ‘கோட்டிகோபா-3’ என்ற புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கிய போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

CLOSE
CLOSE
error: Content is protected !!