முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ்.கே, கிஷன் தாஸ், சரண்குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத் நௌஷாத், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ் CSV, நரேன் ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – தர்புகா சிவா.
ஒளிப்பதிவு – சுஜித் சரங்.
படத்தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங்.
இசை – தர்புகா சிவா.
தயாரிப்பு – சூப்பர் டாக்கீஸ்.
ரேட்டிங் –3.5 /5
பள்ளி, கல்லூரி காலத்தின் வாழ்க்கையை எப்போது எந்த ஒரு காலகட்டத்திலும் திரைப்படமாக்கினாலும் நமக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
பள்ளி கல்லூரி வாழ்க்கை, காதல், பிரிவு, என விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ வெற்றி பெற்ற திரைப்படம் மாதிரியான கதைதான் இநத முதல் நீ முடிவும் நீ.
90களின் இறுதியில் பள்ளி இறுதியாண்டில் இருக்கும் நண்பர்கள் கூட்டம் இனம்புரியாத ஈர்ப்பு, அன்பு, மாணவர்களுக்கேயுரிய காதல் மோதல் என்று எல்லாமுமாகச் சேர்ந்து பள்ளி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த திரைப்படமும் நம் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.
ஆனாலும், ஒரு சுவாரசியமான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தர்புகா சிவா.
பள்ளி வாழ்க்கையைக் கடந்த ஒவ்வொருவருக்கும் அந்த நாள் ஞாபகங்கள் எப்போதும் மனதில் பசுமையாக இருக்கும்.
அதன் பின் கல்லூரி வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை என வந்தாலும் ஒரு நாளாவது அந்த பள்ளி வாழ்க்கையிலேயே இருந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றும்.
அந்த அளவிற்கு நமது பள்ளி வாழ்க்கையில் எத்தனையோ மகிழ்ச்சி, சோகம் என பல மறக்க முடியாத சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கும்.
அவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்து வைக்கிறது இந்த முதல் நீ முடிவும் நீ திரைப்படம்.
சிலருக்குள் காதல் மலர்ந்தும், சிலர் காதல் நிராகரிப்பட்டும் கலவையான உணர்ச்சிகளோடு பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இடைவேளை வரைக்குமான இந்த வாழ்க்கைப் பதிவுகள் ரசிக்கும் படியாக படமாக்கப்பட்டிருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.
வகுப்பறை நடக்கும் கலாட்டாக்கள், கேசட் கடை கேலிகள், கிண்டல்கள் பிரிவு உபசார விழா நேரத்தில் நடக்கும் காட்சிகள் என்று நம்மைப் பள்ளிக் காலத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.
சைனீஸ் கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ்.கே வினோத் கதாபாத்திரத்தில் வரும் கிஷன் தாஸ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
கிஷன் தாஸ் உடன் படிக்கும் மீத்தா ரகுநாத் மீது காதல் ஏற்படுகிறது.
இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.
பள்ளியின் பேர்வெல் தினத்தன்று வேறு ஒரு பெண்ணுடன் மஞ்சுநாத் நௌஷாத் உடன் கிஷன் தாஸ் நெருக்கமாக இருந்ததாக நினைக்கும் மீத்தா ரகுநாத், கிஷன் தாஸ் துடன் சண்டை போட்டு தனது காதலை முறித்துக் கொள்கிறார்.
காலங்கள் கடந்து செல்கிறது, கிஷன் தாஸ் திரைப்பட துறையில் மிக பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார்.
மீண்டும் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் ரியூனியன் முதன் முதலாக நடக்கிறது.
அனைத்து பள்ளி நண்பர்கள் மற்றும் மஞ்சுநாத் நௌஷாத் தனது வருங்காலக் கணவருடன் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
பிரிந்த நண்பர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பேசுகிறார்கள்.
மஞ்சுநாத் நௌஷாத்வைப் பார்த்ததும் கிஷன் தாஸ்க்கு காதல் தவிப்பு ஏற்படுகிறது.
மஞ்சுநாத் நௌஷாத்வும் பள்ளிக் காலத்தில் உள்ள காதலை நினைத்து தவிக்கிறார்.
அதன்பின் அவர்கள் காதல் கை கூடியதா? இல்லையா? அவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? அதன்பின் என்ன என்பதுதான் இந்த முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தின் மீதிக் கதை.
வினோத் ஆக கிஷன் தாஸ். பள்ளி மாணவராக இருக்கும் போது காதல் நாயகனாக கலக்குகிறார்.
காதலைத் தவிர வேறு ஒன்று தெரியாது என்பது போல் காதலுக்காக உருகுகிறார்.
பின்னர் திரைப்பட துறையில் பிரபல இசையமைப்பாளர் ஆனதும், அவரா இவர் என மெச்சூரிட்டி நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார்.
காதல் நாயகனாக வரும் வினோத் என்கிற கிஷான் தாஸ், அவருக்கு இணையாக ரேகா என்கிற மேத்தா ரகுநாத் ஆகியோர் நல்ல தேர்வு.
திரைப்படத்தின் காதல் நாயகி ரேகாவாக நடித்திருக்கும் மீத்தா ரகுநாத்தை தான் சொல்ல வேண்டும்.
சினிமாத்தனம் இல்லாத இயல்பான ஒரு முகம்.
பள்ளி மாணவிகள் எப்படிப் பேசுவார்கள், பழகுவார்கள், நடந்து கொள்வார்கள் என பார்த்துப் பார்த்து நடித்திருக்கிறார்.
முத்தக் காட்சியில் கூட தைரியமாக நடித்திருக்கிறார்.
சைனீஸ் ஆக ஹரிஷ்.கே திரைப்படத்தில் நடித்தவர்களிலேயே அவ்வளவு குறும்புடன், யதார்த்ததுடன் நடித்தவர்களில் இவருக்குத்தான் முதலிடம்.
நமது பள்ளி நண்பர்கள் குழுவில் எப்படியும் இப்படி ஒரு நண்பர் இருப்பார்.
அதுவும் எப்போதும் கேலியும், கிண்டலுமாக இருக்கும் சைனீஷ் என்கிற ஹரீஷ் நடிப்பும் அருமை.
வாழ்க்கைப் பின்னணியும் கேத்தரின் என்கிற பூர்வா ரகுநாத் வாழ்க்கையும் உருக்கம்.
எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு குணம், என்ன வேண்டுமானாலும் செய்யும் இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என எண்ண வைக்கிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் சிவசங்கரி, மற்ற மாணவர்களாக நடித்திருக்கும் சரண் குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன் ஆகியோரும் பள்ளி மாணவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
கேத்தரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்வா ரகுநாத், அனு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்ரிதா மான்டரின், விக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிணி ரமேஷ் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.
தர்புகா சிவாவின் இசையில் ரியூனியன் போது இடம் பெறும் பாடல் உணர்வு பூர்வமாய் அமைந்துள்ளது. பள்ளிக் காட்சிகளில் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு பள்ளியை நம் கண்முன் நிறுத்துகிறது.
இடைவேளை வரை இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள், நடிப்பு என ஒவ்வொன்றிலும் இருக்கும் சுவாரசியம் இடைவேளைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுகிறது.
ரியூனியன் பார்ட்டியிலேயே திரைக்கதை ஒரே இடத்தில் அப்படியே நின்று விடுகிறது.
இடைவேளை வரை ஒரு படத்தை யதார்த்தமாய ரசித்தது, பின் ஒரு நாடகத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
இசையமைப்பாளராக இருந்து தர்புகா சிவா இயக்குநராக மாறி அழகான பள்ளி வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.
சுஜித் சரங் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் காட்சிகளை அழகூட்டுகின்றன.
தர்புகா சிவா இசையில் முதல் நீ முடிவும் நீ பாடல் க்ளாஸ் பாடல்.
அந்தப் பள்ளியின் ஒரு மூலையில் நின்று கொண்டு நாமே அதை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர் தர்புகா சிவா.
மொத்தத்தில் ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் மறுபடியும் ஒரு ஆட்டோகிராப்.











