மருத திரை விமர்சனம் ரேட்டிங் –275 /5

நடிகர் நடிகைகள்  – ஜிஆர்எஸ், ராதிகா சரத்குமார், சரவணன், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், மாரிமுத்து, வேல் ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, மற்றும் பலர்.

இயக்கம் – ஜி ஆர் எஸ்.

ஒளிப்பதிவு – பட்டுக்கோட்டை ரமேஷ்.

படத்தொகுப்பு –ஜி ஆர் எஸ்.

இசை – இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு – பிக்வே பிச்சர்ஸ்.

ரேட்டிங் –2.75 /5

தமிழகத்தில் காலாகாலமாக பல ஊர்களில் நடந்து வரும் பலவிதமான சம்பிராதயங்கள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், செய்முறைகள் என இருக்கின்றன.

அவற்றில் ஒன்றாக தென் மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம் ‘செய்முறை’ என்ற நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த மருத திரைப்படம்.

அந்தக் காலத்தில் வசதி, வாய்ப்புகளில் குறைவாக இருக்கும் உறவினருக்கு அவரது உற்றார், உறவினர் பண உதவி பொருள் உதவி செய்து உதவும் வழக்கம்தான் பிற்காலத்தில் ‘செய்முறை’ என அழைக்கப்பட்டது.

ஒரு நல்ல விஷயத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது போகப் போக தங்களது பண வசதி, அந்தஸ்து ஆகியவற்றை வெளிக்காட்டுவதாக மாறியது.

அதனால் கொலை வரை கூட பல சம்பவங்கள் நடந்துள்ளது தென் மாவட்டங்களில்.

அந்த ‘செய்முறை’யை ஒரு பதிவாக சொல்வதற்காகவே இந்த திரைப்படம் என்கிறார் இயக்குனர் ஜிஆர்எஸ்

சரவணன், ராதிகா இருவரும் அண்ணன் தங்கை இருக்கிறார்கள்.

ராதிகாவின் மகன் காது குத்தும் விழாவில் அண்ணன் சரவணன் ரொக்கப் பணம், தங்கச் செயின் என வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார்.

பின்னர் பதிலுக்கு சரவணன் குடும்பத்தில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர்.

இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகா கணவரான மாரிமுத்துவை அவமானப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால், அண்ணன், தங்கையான சரவணன், ராதிகா பிரிகின்றனர்.

பல வருடங்கள் கழித்தும் கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை எப்படியாவது ராதிகாவிடம் இருந்து பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார் விஜி சந்திரசேகர்.

இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகன் ஜி.ஆர்.எஸ் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ராதிகாவின் மகனான ஜிஆர்எஸ் கடன் வாங்கியாவது செய்முறை செய்ய நினைக்கிறார்.

இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதுதான் இந்த மருத திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மருத திரைப்படத்தை இயக்கியதோடு மட்டு மில்லாமல் கதாநாயகனாக நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.எஸ்.

இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை.

ஆனால், திரைப்படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் இயக்குனர் ஜி.ஆர்.எஸ் மிகவும் ஓவராக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கதாநாயகி லவ்லின் கொடுத்த வேலையை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.

தனது முறைப் பையன் ஜிஆர்எஸ்ஸைக் காதலிப்பவராக லவ்லின் சந்திரசேகர்.

முறைப் பையன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அவரைக் காதலிக்கலாம் என்ற வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் காதலனின் பொறுப்பற்ற தன்மையை சுட்டுக் காட்டுவதோடு அவரது பொறுப்பு முடிந்து விடுகிறது.

கதாநாயகன் ஜிஆர்எஸ் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமாரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

அண்ணன் பாசம், தாய் பாசம் என நடிப்பில் ராதிகா சரத்குமார் பளிச்சிடுகிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

காளி ஆக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் காட்சிக்குக் காட்சி ஆவேசமாக நடித்திருக்கிறார்.

ஓவராக நடிக்கிறார் என்று தெரிந்தாலும் அவருடைய கதாபாத்திரம் அப்படித்தான் என்பதால் மிரளத்தான் வைக்கிறார் விஜி சந்திரசேகர்.

இவருக்கு இணையாக போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜி சந்திரசேகர்.

இவருடைய மிரட்டலான நடிப்பு ஒரு சில இடங்களில் மிகைப் படுத்தலாக இருக்கிறது.

ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சரவணன்.

மனைவிக்கு அடங்கிய கணவனாக, பாசக்கார அண்ணனாக சரவணன் நடிப்பு மிக அருமையாக நடித்திருக்கிறார்.

தங்கை வீட்டு காதுகுத்து விழாவில் தனது கௌரவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஏட்டிக்குப் போட்டியாக செய்முறை செய்யும் சரவணன், தான் புலி மீசை வைத்திருப்பதாக கர்வத்துடன் பேசுகிறார்.

மற்ற காட்சிகளில் மனைவி விஜி சந்திரசேகருக்கு அடங்கிய பூனை மீசை கணவராக வலம் வருகிறார் சரவணன்.

மற்ற காட்சிகளில் மட்டும் மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு வந்து போகிறார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் திருமண விழா, காதுகுத்து விழாக்களில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.ஆர்.எஸ்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளரான இவர், ஜிஆர்எஸ் மண் மணம் மாறாமல் இயக்குனர் இமயம் பாணியிலேயே திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் சித் ஸ்ரீராம் பாடும் ‘இல்லாம இருந்த எனக்கு’ பாடல் தாய்ப் பாசத்தில் உருக வைக்கிறது.

‘மாமன் கொடுக்கும் சீரு…’ பாடல் 90களில் வந்த பாடல் போல் உள்ளது.

‘மருதமல்லி’ டூயட் பாடல் இளையராஜாவின் தனித்துவ பாடலாய் ரசிக்க வைக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறது.

இநத திரைப்படத்தின் நீளம் ரொம்ப அதிகம் உள்ளது.

திரைப்படத்தில் தேவையற்ற சில காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

90களில் இந்த மருத திரைப்படம் வந்திருந்தால் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும்.

மொத்தத்தில் ‘மருத’ திரைப்படம் சிறப்பான செய்முறை விருந்து ஆனால் சுவை மிகவும் குறைவான விருந்து.

error: Content is protected !!