எண்ணித்துணிக திரை விமர்சனம் ரேட்டிங்:-3.5 /5

நடிகர் நடிகைகள் :-  ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், சுனில் ரெட்டி, G மாரிமுத்து, குரைஷி, மற்றும் பலர்.

இயக்கம் :- எஸ்.கே. வெற்றிச்செல்வன்.

ஒளிப்பதிவு :- ஜே பி தினேஷ்குமார்.

படத்தொகுப்பு :- சாபு ஜோசப் பி ஜே.

இசை :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு :- ரெயின் Of ஏரோஸ் என்டர்டைன்மென்ட்.

ரேட்டிங் :- 3.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் தற்போது த்ரில்லர் சீசன் போல தோன்றுகிறது.

வரும் திரைப்படங்கள் வாராவாரம் தவறாமல் ஒரு த்ரில்லர் திரைப்படம் ஆவது வந்துவிடுகிறது.

இந்தத எண்ணித் துணிக திரைப்படமும் இப்படி ஒரு த்ரில்லர் திரைப்படம்தான்

திரைப்படம் ஆரம்பத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பின்பு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி பல திருப்பங்களுடன் திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.கே. வெற்றிச்செல்வன்

திரைப்படத்தில் பல இடங்களில் பரபரப்பாகவும், சில இடங்களில் கொஞ்சம் மெதுவாகவும் நகர்கிறது.

ஆனாலும் திரைப்படத்தில் பல முக்கியமான திருப்பங்கள் மட்டும் திரைப்படத்தைக் காப்பாற்றி இருக்கிறது.

கதாநாயகன் ஜெய், கதாநாயகி அதுல்யா ரவியும் இருவரும் காதலர்கள் இருவருடைய காதலை இருவர் வீட்டில் பேசி சம்மதம் தெரிவிக்க திருமணத்திற்காக ஒரு நாள் நகை எடுப்பதற்காக நகைக்கடை ஒன்றுக்கு கதாநாயகி அதுல்யா ரவி குடும்பத்துடன் சொல்கிறார்கள்.

ஒரு நகைக்கடையில் 2000 கோடி மதிப்பில்லான வைரம் இருப்பதாகவும் அந்த வைரத்தை கொள்ளையடிக்க வில்லன் வம்சி கிருஷ்ணாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது.

நான்கு நண்பர்கள் உதவியுடன் நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டுகிறார்கள்.

அந்த சமயம் பார்த்து அந்த நகைக்கடைக்கு வரும் முகமூடி கொள்ளையர்கள் அங்குள்ள 2000 கோடி மதிப்பு உள்ள வைரத்தை கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கதாநாயகி அதுல்யா ரவி மற்றும் சிலரை
கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகின்றனர்.

கதாநாயகி அதுல்யா ரவியை கொலை செய்தவர்களை காவல் துறையின் உதவியுடன் தன்து காதலியை கொன்றவர்களை பழி வாங்கி விட வேண்டும் என துடிக்கிறார் கதாநாயகன் ஜெய்.

அந்தக் கொள்ளையர்கள் அந்த 2000 கோடி மதிப்பிலான வைரத்தை வில்லன் கண்டுபிடித்தார்களா? இல்லையா? தனது காதலி கதாநாயகி அதுல்யா ரவியை கொன்றவர்களை கதாநாயகன் ஜெய் பழிக்குப் பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் எண்ணித் துணிக திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த எண்ணாத்துணிக திரைப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது காதலியை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்கத் துடிக்கும் வெறி கொண்ட காதலனாக கதாநாயகன் ஜெய் நடிப்பு அருமை.

இதுவரை ஜெய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் காதல், காமெடி என வலம் வந்த கதாநாயகன் ஜெய்.

எண்ணித்துணிக திரைப்படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகன் வரிசையில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க வைத்து முழுமையான ஆக்ஷன் கதாநாயகனாக மாறி நடித்திருக்கிறார்.

இவரின் புதிய முயற்சி பாராட்டப்படுகிறது.

இவரின் எதார்த்த நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

காவல்துறையினர் விசாரித்து முன்பாகவே கதாநாயகன் ஜெய் வேகவேகமாக விசாரிக்கிறார்.

இந்த எண்ணித்துணிக திரைப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

கொடுத்த கதாபாத்திரத்தை கதாநாயகி அதுல்யா ரவி மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இயல்பான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் சுரேஷ் சுப்ரமணியன் இருவரும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வில்லன் வம்சி கிருஷ்ணாவின் வில்லதனம் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

திரைப்படங்களில் அவ்வப்போது தோன்றும் கலகலப்பு ரசிக்கும்படி இடம்பெற்றிருக்கிறது.

நகைக்கடை கொள்ளையில் கொள்ளையர்களிடம் சிக்கி உயிர் பிழைத்தவராக அஞ்சலி நாயரின் நடிப்பு அருமையாக இருக்கிறது.

தனது 2000 கொடி மதிப்பு உள்ள வைரத்தை பறி கொடுத்த அமைச்சராக சுனில் நடிப்பு அருமை.

அமைச்சர் சில காட்சிகளில் பேசும் வசனங்களுக்கு கை தட்டுங்கள் விழுகிறது.

அமைச்சரின் ஆசை நாயகியாக வித்யா பிரதீப் நடிப்பு அருமையாக இருந்தது.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது.

ஆக்‌ஷன் இயக்குனர் முருகனின் ஆக்‌ஷன் காட்சிகளில் அனைத்தும் அதிரடியாக உள்ளது.

ஆக்சன் இயக்குனர் முருகன் கதாநாயகன் ஜெய்யின் சண்டை கட்சிகளில் ஓவராக பில்டப்  கொடுத்து விட்டாரோ.

ஒளிப்பதிவை மிக கனகச்சிதமாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ் குமார்.

ஒளிப்பதிவாளர்  ஜே.பி. தினேஷ்குமார் அவர்களின் திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

சாபு ஜோசப் பி ஜே படத்துக்கு அருமை.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பின்னணி இசை திரைப் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

எண்ணித் துணிக’ அருமையான தலைப்பை இந்த திரைப் படத்திற்கு யோசித்த இயக்குனர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் பாராட்டலாம்.

மிக் அருமையான திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அதை நிறைவேற்றியும் இருக்கிறார் இயக்குனர் எஸ்.கே. வெற்றிச்செல்வன்.

விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சுவாரசியத்தை கூட்டி திரைப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ.கே. வெற்றிச்செல்வன்.

மொத்ததில் எண்ணித்துணிக திரைப்படம் எதற்கு துணிந்தவன்.