பட்டாம்பூச்சி திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.25 / 5.
நடிகர் நடிகைகள் :- சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி, லியோ சிவதாஸ்,
மற்றும் பலர்.
இயக்கம் :- பத்ரி.
ஒளிப்பதிவு :- இ. கிருஷ்ணசுவாமி..
படத்தொகுப்பு :- ஃபென்னி ஆலிவர்.
இசை :- நவ்நீத் சுந்தர்.
தயாரிப்பு :- அவனி டெலி மீடியா.
ரேட்டிங் :- 2.25 / 5.
பல நகைச்சுவைப் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சி இந்த த்ரில்லர் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமே நடித்திருக்கிறார்.
இயக்குனர் பத்ரி இயக்கியுள்ள இந்தப் திரைப்படத்தில் மிகக்கொடூரமான வில்லனாக ஜெய் நடித்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் தான் சீரியர் கில்லர்களை பற்றிய திரைப்படங்களை அடிக்கடி பார்க்க முடியும்.
தமிழ் திரைப்பட உலகில் எப்போதோ ஒரு முறை அப்படிப்பட்ட திரைப்படங்கள் வரும்.
இது அப்படி வந்துள்ள திரைப்படம். 1989களில் நடக்கும் கதை.
திரைப்படம் முழுவதும் அந்த காலகட்டத்திலேயே நடக்கிறது.
அதற்காக மிகவும் கவனமுடன் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி.
பல கொடூர கொலைக் குற்றவாளியாக தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் கொடூர வில்லன் ஜெய்.
திடீரென தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என கூறுகிறார் கொடூர வில்லன் ஜெய்.
பல கொலைகளைச் செய்துவிட்டு அங்கு பட்டாம்பூச்சி ஓவியத்தை வரைந்துவிட்டு வந்ததால் அப்படி ஒரு பெயர்.
கொடூர வில்லன் ஜெய் சொன்னதை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
பல கொலைகளை செய்த பட்டாம்பூச்சி பற்றி அதற்கான விசாரணையை காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர் சி மேற்கொள்கிறார்.
ஆனால், புத்திசாலித்தனமாக, அந்த பட்டாம்பூச்சி தானில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் வில்லன் ஜெய்.
இருந்தாலும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என நிரூபிக்கப் போராடுகிறார் கதாநாயகன் சுந்தர் சி.
அதில் கதாநாயகன் சுந்தர் சி வெற்றி பெற்றாரா? இல்லையா? கொடூர வில்லன் ஜெய் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா! என்பதுதான் இநத பட்டாம்பூச்சி
திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர் சி நடித்து இருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளும் விதத்தில் கம்பீரமாகவே நடித்திருக்கிறார் சுந்தர் சி.
மனைவி மற்றும் மகள் இழந்த துக்கம் அவரை அடிக்கடி மனதளவில் பாதிக்கப் படுகிறார்.
அதிலிருந்து மீண்டு கொடூர வில்லன் ஜெய் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் போராடுகிறார்.
காவல்துறை அதிகாரியாக இருந்தும் காக்கிச் சட்டை அணியாத காவல் துறை அதிகாரியாக காவல் துறையின் கண்ணியத்தைக் காக்கப் பாடுபடுகிறார் கதாநாயகன் சுந்தர் சி.
சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தவர் நடிகர் ஜெய்.
ஜெய் முதன் முறையாக மிகவும் கொடூரமான வில்லனாகப் பார்ப்பதே ஆச்சரியமாக உள்ளது.
தன்னை ஒரு கொடூர கொலைகாரனாகவும் கொடூரமான வில்லனாகவும் காட்டிக் கொள்வதற்கு அவருடைய பாடி லாங்குவேஜை மாற்றி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
சைக்கோ கொலைகாரன் என்பதால் என்ன செய்தாலும் அது கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
அதைப்போல்தான் ஜெய் மிகக் கொடூரமாக சைக்கோ கொலைகாரனாக நடித்தது அவருக்கு அமைந்துவிட்டது
ஜெய்க்கு சிறு வயது முதல் ஏதோ ஒரு வியாதி காரணமாக அடிக்கடி கழுத்தையும், கையையும் திருப்பித் திருப்பி என்னமோ பண்ணுகிறார்.
அதை ஒரே மாதிரியாக படம் முழுவதும் சரியாகவே செய்திருக்கிறார்.
இந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஹனி ரோஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்
இந்த பட்டாம்பூச்சி
திரைப்படத்தில் கதாநாயகி இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகி ஹனி ரோஸ் கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கிறது.
கணவரைப் பிரிந்து மகளுடன் தனியாக வசிக்கும் வரும் கதாநாயகி ஹனி ரோஸ், கதாநாயகன் சுந்தர் சி இடையில் அப்படியே காதலை வரவைத்து விடுகிறார் இயக்குனர்.
நல்ல வேளையாக காதல் காட்சிகளை வைக்கவில்லை.
திரைப்படத்தின் முதல்பாதியில் பரபரப்பும் விறுவிறுப்புமாக திரைக்கதை நகர்கிறது.
அதற்குப் பிறகு ஜெய்யை கதாநாயகன் சுந்தர் சி விரட்டுவது பற்றிய காட்சிகளே அதிகம் இருக்கிறது.
இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
நவ்நீத் சுந்தரின் திரைப்படத்தின் விறு விறுப்புக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது. 80களின் கால கட்டத்தை கண்முன் காட்ட ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமி, கலை இயக்குனர் பிரேம்குமார் மிகவும் அதிகமாக உழைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் பட்டாம்பூச்சி ரத்தக்களரியான திரைப்படம்











