டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் அணியை சேர்ந்த தலைவர் பொதுச்செயலாளர்  பொருளாளர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சென்னை 24 பிப்ரவரி 2022 டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் டத்தோ ராதாரவி அவர்கள் அணியை சேர்ந்த தலைவர் பொதுச்செயலாளர்  பொருளாளர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சவுத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ யூனியனின் 2022 – 2024 வருடத்திற்கான தேர்தல் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R. மஹாலில் இன்று தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்ற உறுப்பினர்கள் மொத்தம் 1368 வாக்குகள்.

தபால் மின்னஞ்சல் மற்றும் பதிவான மொத்தம் 912 வாக்குகள்.

இன்று நடந்த தேர்தலில் டத்தோ உயர்திரு ராதாரவி அவர்களின் தலைமையிலான வெற்றி அணி சார்பாக 23 நபர்கள் போட்டியிட்டனர்.

வெற்றி அணி சார்பாக டத்தோ உயர்திரு ராதாரவி  அவர்கள் தலைவர் பதவிக்கு பெற்று அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட உயர்திரு T.N.B. கதிரவன் அவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கு அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட உயர்திரு ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் பொருளாளர் பதவிக்கு அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி அணி சார்பாக தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர்பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

error: Content is protected !!