பெப்சி தொழிலாளர் ஊதியம் உயர்வு சம்பந்தமாக வருகிற 3.3.2022 அன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
சென்னை 01 மார்ச் 2022
பெப்சி தொழிலாளர் ஊதியம் உயர்வு சம்பந்தமாக வருகிற 3.3.2022 அன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான தொழிலாளர்கள் சம்பளம், பொது விதிகளுக்கான பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது.
மேலும், வருகிற 3.3.2022 அன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் இரு சாராரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளார்கள்.
மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படும் வரை படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சம்பளத் தொகையினை மட்டுமே தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் புதிய சம்பளத்தை தர வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்தக் கூடாது.
பெப்சி தொழிலாளர் ஊதியம் உயர்வு சம்பந்தமாக வருகிற 3.3.2022 அன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. @ThenandalFilms @MuraliRamasamy4 pic.twitter.com/dlmwH01aF5 pic.twitter.com/0uoStMm7lu
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) March 1, 2022











