தனது மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா!
சென்னை 08 மார்ச் 2022
தனது மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா!
இயக்குனர் பாலா நேற்று முன்தினம் தனது மனைவி முத்து மலரை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பாலா.
அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்கள் திரைப்பட ரசிகர்களின் மனதில் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
இந்திய திரைத் துறையில் இயக்குனர் பாலாவிற்கு அங்கீகாரம் உண்டு.
அவர் தமிழ் திரைப்பட உலகில் நடிகர் விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு ‘நந்தா’, ‘பிதாமகன்’ என பல பொக்கிஷங்களை தமிழ் திரைப்பட உலகிற்கு கொடுத்தவர்.
சேது திரைப்படத்திற்கு பின்பு விக்ரம் தமிழ் திரைப்பட உலகில் உச்சத்திற்கு வந்தார்.
சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களின் முழு நடிப்பையும் வெளியில் கொண்டு வந்தவர்.
இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
இயக்குநர் பாலாவுவிற்க்கும், முத்துமலருக்கும் கடந்த 2004 ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் தேதி அன்று மதுரையில் திருமணம் நடந்தது.
18 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும், இயக்குனர் பாலாவின் மனைவி முத்து மலர் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இது பிரிவு பற்றி இயக்குனர் பாலா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த விஷயம் அவரது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தற்போது மீண்டும் இயக்குனர் பாலா சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார்.











