கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பிரபல காமெடி நடிகரின் தந்தை காலமானார்.
சென்னை 11 ஜூன் 2021
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பிரபல காமெடி நடிகரின் தந்தை காலமானார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல காமெடி நடிகர் பாலசரவணனின்
தந்தை கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் பால சரவணன்.
இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் சமீபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் காலமானார்.
காமெடி நடிகர் பால சரவணன் தந்தையின் வயது 60. காமெடி நடிகர் பால சரவணன் தந்தை மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன், கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். #actorbalasaravanan ‘s father #SARanganathan passed away today in madurai, due to #Covid19. #RIPSARanganathan pic.twitter.com/IKsygDWJB3
— FridayCinema (@FridayCinemaOrg) June 11, 2021











