குதிரை வால் திரை விமர்சனம் ரேட்டிங் 3.25 / 5

நடிகர் நடிகைகள் – கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி, ரவிந்திரா விஜய், பிரதீப் K விஜயன், KSG வெங்கடேஷ், SD பாலகுமாரன், ஸ்வேதா டோரதி, அன்ன பூரணி மற்றும் பலர்.
இயக்கம் – மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துகுமார்.
படத்தொகுப்பு – MKP கிரிதரன்.
இசை – பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர்.
தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ்.
ரேட்டிங் – 3.25 /5
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களது நிறுவனம் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், வெற்றித் திரைப்படங்கள் வரிசையில் வெளி வந்திருக்கும் திரைப்படம் குதிரைவால்.
தமிழ் திரைப்பட உலகில் பல இரட்டை இயக்குனர்கள் பாரதி வாசு, ராபர்ட் ராஜசேகர், ஜேடி ஜெர்ரி, வெற்றி பெற்று இருக்கிறார்கள் அந்த வரிசையில் குதிரைவால் திரைப்படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்துள்ளார்கள்.
எழுத்தாளர் ராஜேஷ் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள இந்த குதிரை வால் திரைப்படம்.
இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து குதிரைவால் திரைப்படத்தை மிக அருமையாக இயக்கி உள்ளனர்.
இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கும் குதிரைவால் திரைப்படம் இன்று 18 மார்ச் 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கதையின் நாயகன் கலையரசன் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
கதையின் நாயகன் கலையரசனுக்கு
38 வயதான திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார்.
நண்பர்களும் மற்றும் உறவினர்களும் இல்லாத காரணத்தால் தனிமையில் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.
கதையின் நாயகன் கலையரசன துக்கத்தில் கனவு உலகிற்கு செல்கிறார்.
காலையில் கண் விழித்து பார்க்கும் போது தனது உடலில் குதிரைவால் முளைத்திருப்பதை அறிகிறார்.
இது கனவா? அல்லது நிஜமா? என புரியாமல் தவிக்கிறார்.
கதையின் நாயகன் கலையரசன் வால் இருப்பது இவருடைய கண்களுக்கு மட்டுமே தெரிவதை உணர்கிறார்.
திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கதையின் நாயகன் கலையரசன் ஒரு குதிரை வாலோடு தூக்கத்தில் இருந்து வாழ்ந்து வருகிறார்.
திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து குதிரை வால் முளைத்த விடுவதால் கதையின் நாயகன் கலையரசன் அலையோ அலை என்று குதிரை வால் முளைத்த காரணத்தை
தேடி அலைகிறார்
தனது சொந்த பெயரை மறந்து, தான் ஃபிராய்ட் என உணரும் கதையின் நாயகன் கலையரசன்.
கனவுகளிலேயே தனக்கு குதிரை வால் முளைத்த காரணமும் இருப்பதாக எண்ணி அநத ஊரில் உள்ள குறிசொல்லும் பாட்டியிடமும் ஒரு ஜோசியரிடமும் மற்றும் கணக்கு வாத்தியாரிடமும் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.
மறந்து போன கனவை ஞாபகப் படுத்த சொல்லும் பாட்டி, உலகத்துல இருக்க எல்லா பிரச்சினைக்கும் கணக்குல தீர்வு இருக்கென சொல்லும் கணக்கு வாத்தியார் என அனைவரும் திரைப்படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கின்றனர்.
கதையின் நாயகன் கலையரசனுக்கு எப்படி குதிரை வால் முளைத்தது எப்படி அதற்கான ஊரில் உள்ளவர்கள் கூறும் காரணமும், அவருடைய பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதும் தான் இந்த குதிரை வால் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த குதிரை வால் திரைப்படத்தில் கதையின் நாயகனாக கலையரசன் நடித்திருக்கிறார்.
குதிரை வால் முளைத்த பிறகு வாலின் அளவு மற்றும் அசைவுக்கு ஏற்றார் போல கதையின் நாயகன் கலையரசன ஒவ்வொரு பிரேமிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார்.
இந்த கதையின் நாயகி இந்த திரைப்படத்தில் வேலைகள் அதிகம் இல்லை கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்
வித்தியாசமான தோற்றத்தில் சேத்தன், உயரச் சவால் கொண்ட ஆனால் ஸ்டைலிஷான அந்த டிடக்டிவ் எல்லாம் அருமை அசத்தல் .
இந்த திரைப்படத்தில் உள்ள மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி, ரவிந்திரா விஜய், பிரதீப் K விஜயன், KSG வெங்கடேஷ், SD பாலகுமாரன், ஸ்வேதா டோரதி, அன்னபூரணி ஆகிய அனைவரும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்து மிக அருமையாக கொடுத்த கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் இறகுகள் வருடுவது போல் இருக்கிறது.
பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் இணைந்து அமைத்திருக்கும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, பல இடங்களில் அமைதியை மட்டுமே பின்னணி இசையாக கொடுத்திருப்பது கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சிகளின் அழுத்தத்தையும் கவனிக்க வைக்கிறது.
திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார்.
மலையும், மலை சார்ந்த இடங்களையும் அழகியலோடு படமாக்கியிருப்பதோடு, அவற்றையும் ஒரு கதாப்பாத்திரமாக திரைப்படம் பார்க்கும் நம் கண் முன் நிறுத்துகிறார்.
சொல்லலில் படத்தொகுப்பில் ஒரு புதிய வடிவத்தை அமைத்து பார்வையாளர்களுக்கு பெருங்கதையை எளிதாக்கி 2 மணிநேர 4 நிமிடம் திரைப்படமாக கொடுத்துள்ளார் எடிட்டர் கிரிதரன்.
படத்தொகுப்பாளர் எம்.கே.பி. கிரிதரண், தன்னால் முடிந்த அளவுக்கு திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைக்க முயற்சித்திருக்கிறார்.
குதிரைவாலின் காரணம் தேடிசெல்லும் பயணம் என்றென்றும் கலை உலகில் நிலைத்து நிற்கும்.
திரைப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மிலும் பல அடுக்குகளில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது.
தற்கால சினிமா வகைமைகளில் புதிய வகைமையை அறிமுகப் படுத்தும் முயற்சியில் குதிரைவால் ஒரு முக்கியமான திரைப்படம்.
ஒற்றை கதை சொல்லல் தன்மையை விடுத்து படம் நெடுகிலும் பல்வேறு கிளைக்கதைகள் வால் போல முளைத்துக் கொண்டே இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
கதையில் வரும் கனவுத் தன்மை, கற்பனையில் உருவாகும் உலகம், காட்சிகளி்ன் படிமங்களின் இருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் எனப் பல காரணிகள் முழுக்க நம் மூளையை ஆக்கிரமித்து பெரும் கவனத்தை கோருகிறது.
ஒரு காட்சியின் முழுச்சாரத்தை அறிந்துகொள்ள பலமுறை திரும்ப பார்க்க தூண்டும் தன்மையுடைதாக இருந்தாலும் நம்முள் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே திரைப்படத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியலைப்போலவே எம்.ஜி.ஆர் படம் முழுதும் தவிர்க்கமுடியாத வடிவாக வருகிறார்.
பெரும் தனி இலக்கியத்திற்கு உண்டான அனைத்து கூறுகளுடன் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ் .
இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர்
தேடலுக்கு விதைப் போட்டிருக்கும் குதிரைவால், புது முயற்சியில் வெற்றி கண்ட குதிரையாகவே தனி இடத்தைப் பிடித்திருக்கிறது
கனவில் கண்டதை நிஜத்தில் தேடுகிறார்.
மொத்தத்தில் குதிரைவால் திரைப்படம் புது விதமான அனுபவத்தை தரும்.











