பூ சாண்டி வரான் திரை விமர்சனம் ரேட்டிங் –3.25 /5.

 

நடிகர் நடிகைகள்  – மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள், வினோத் மோகனசுந்தரம், தினேஷ்னி, மற்றும் பலர்.

இயக்கம் – ஜே.கே.விக்கி

ஒளிப்பதிவு – அசலிசம் பின் முகமது அலி.

படத்தொகுப்பு – ஜே.கே.விக்கி.

இசை – டஸ்டின் ரிதுவான் ஷா.

தயாரிப்பு – ட்ரையம் ஸ்டுடியோ மலேசியா.

ரேட்டிங் –3.25 /5

 

தமிழ்த் திரைப்படங்கள் தமிழகத்தைத் தாண்டியும் வெளி நாடுகளிலும் மலேசியாவில் அவ்வப்போது தமிழ் திரைப்படங்கள் தயாராகி அங்கு வெளியாகிறது.

அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் இந்தியாவிலும் வெளியாகும். அப்படி இன்று வெளியாகும் திரைப்படம் தான் இந்த ‘பூ சாண்டி வரான்’.

இந்த பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குனர் ஜே.கே. விக்கி மலேஷியா என்பதால் முழுவதும் மலேஷியா நாட்டில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பூ சாண்டி வரான்.

மலேஷியாவை நாட்டைச் சேர்ந்த நடிகர் நடிகைகளை வைத்து இநத பூ சாண்டி வரான் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜே. கே. விக்கி.

இந்த திரைப்படத்தில் ஒருவர் மட்டுமே தமிழக்த்தை சேர்ந்த நடிகராக ‘மிர்ச்சி ரமணா.

இந்த பூ சாண்டி வரான் திரைப்படத்தில் மிர்ச்சி ரமணா  நடித்து இருக்கிறார்.

நாம் அனைவரும் சிறு பருவத்தில் இருந்து அதிகம் கேள்விப்பட்டிருக்கும் சொல் பூச்சாண்டி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதைப் பற்றி நமக்கு யாருக்கும் தெரியாது.

பலருடைய வீடுகளில் குழந்தைகள் அடம்பிடித்தால் பலரால் பயம் படுத்துவதற்கு சொல்லப்படுகிற ஒரு வார்த்தைதான் பூ சாண்டி வரான் என கூறுவார்கள்.

குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காகவோ அல்லது தூங்க வைப்பதற்காகவோ பெரியவர்கள் “பூ சாண்டி வரான்” என்ற வார்த்தையை அதிகம் தாயும் தந்தை மற்றும் தாத்தா பாட்டியும் பயன்படுத்துவார்கள்.

 

பூச்சாண்டி” யார்.? பூச்சாண்டி எப்படி இருப்பார்.

என்பதை இந்த பூ சாண்டி வரான்  திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் புதுமுக  இயக்குனர் ஜே.கே. விக்கி.

ஆவிகள் மற்றும் அமானுஷ்யங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வமாக இருக்கும்  மிர்ச்சி ரமணா.

இந்த ஆராய்ச்சியை மலேசியாவில் நடத்தலாம் என முடிவு எடுத்து வருகிறார்.

ஆவிகள் மற்றும் அமானுஷ்யங்கள் பற்றிய தெரிந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து மலேசியா சென்று அங்கு நடந்த ஒரு அபூர்வ நிகழ்ச்சி பற்றி தெரியவருகிறது.

மிர்ச்சி ரமணா பழங்கால பொருள்களை பற்றியும் பேய் மற்றும் அமானுஷ்ய சக்தியை பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மலேஷியாவில் உள்ள தினேஷ் சாரதி கிருஷ்ணன், என்பவரை மிர்ச்சி ரமணா சந்திக்கிறார்.

Read Also  நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம்

தினேஷ் சாரதி கிருஷ்ணன் லோகன் நாதன் மற்றும் கணேசன் மனோகரன் மூவரும் ஒரே அறையில் நெருங்கிய நண்பர்களாக இருக்க கால்கள் செயலற்று இருக்கும் மாற்றுத் திறனாளியான லோகன் நாதன் என்பவர் இருப்பிடத்தில் தங்கி இருக்கிறார்கள்.

அங்கு அவர் பண்டைய காலத்தில் உள்ள கலை பொருட்களை மற்றும் மன்னர் காலத்தில் உள்ள நாணயங்களை ஆர்வத்துடன் சேகரித்து வருவதுதான் லோகன் நாதனுக்கு  வழக்கம்.

உலகின் அனைத்து மூலையில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பண்டைய காலத்தில் உள்ள சேகரித்த பொருட்கள் அவர் வீட்டை அலங்கரித்து வைத்திருக்கிறார்

தினேஷ் சாரதி கிருஷ்ணன் தனது நண்பர்களான லோகன் நாதன் மற்றும் கணேசன் மனோகரனுடன் இருக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை  மிர்ச்சி ரமணாவிடம் கூறுகிறார்.

இதில் ஒருநாள் ஒரு நாள் இரவு பொழுது போகாத போது ஒரு பண்டைய கால நாணயத்தை வைத்து ஆவியை வரவழைப்போம் என்று கூறி நண்பர்கள் மூவரும் அதன் மூலமாக ஆவி ஒன்றை வரவழைக்கிறார்கள்.

இரவில் ஆவிகளுடன் பேச முடிவெடுத்து ஒரு முயற்சியில் மூவரும் ஈடுபட்டட போது மல்லிகா என்ற 23 வயது இளம் பெண்ணின் ஆவி அவர்களிடம் வந்து பேசுகிறது.

நதி நீரில் மூழ்கி இறந்ததாக அந்த ஆவி சொல்ல அதை ஆர்வத்தில்தான் மல்லிகாவை தேட ஆரம்பிக்கிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அந்த நாணயத்தை வைத்து மல்லிகாவுடன் பேசிக் கொண்டு வருகின்றனர் மூவரும். ஒருநாள், மூவரில் ஒருவரான கணேசன் மனோகரன் இறந்து விடுகிறார்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன் அந்த அமானுஷ்ய சக்தி தான் கணேசன் மனோகரனை கொன்றுவிட்டதாக எண்ணுகின்றனர்.

இதை அடுத்து யார் அந்த மல்லிகா.? அந்த நாணயத்தின் மறுபக்கம் என்ன.? கணேசன் மனோகரன் சாவுக்கு யார் காரணம்.? என கணடறிய கதாநாயகன் மிர்ச்சி ரமணா உடன் பயணப்படுகின்றனர் தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன்.. இறுதியில் என்னவானது என்பதுதான் பூச்சாண்டி திரைப்படத்தின் மீதிக் கதை.

மிர்ச்சி ரமணா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் தன் கண் பார்வையில் கூட மிரட்டி எடுக்கிறார் ரமணா. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு கதாநாயகன் மிர்ச்சி ரமணா.

குரல் வசீகரமும் உச்சரிப்பு சுத்தமாகவும் இருக்கும்  மிர்ச்சி ரமணா கதையை நகர்த்திச் செல்வது  மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

சங்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தினேஷ் சாரதி கிருஷ்ணன் காமெடி, கோபம், படபடப்பு வெறுப்பு என பல விதமான கோணங்களில் தனது நடிப்பில் தனது திறமையை மிக அருமையாக காண்பித்துள்ளார்.

Read Also  சென்னை பழனி மார்ஸ் - திரை விமர்சனம்

தனது நண்பன் இறந்ததை எண்ணி கோபம் அடையும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லத்தனமான நடிப்பை அருமையாக மிரட்டலான நடிப்பை மிக அருமையான நடித்திருக்கிறார்.

குரு மற்றும் அன்புவின் கதாபாத்திரமாக நடித்த கணேஷன் மனோகரன் மற்றும் லோகன் நாதன் இருவரும் கதைக்கு சரியான தேர்வுதான்.

இருவரும் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்துள்ளனர்.

திரைப் படத்தில கதாநாயகியாக வந்த ஹம்சினி பெருமாள். அழகான தேவதையாக வருவதிலும் அரண்டு மிரட்டுவதிலும் தனது நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

அருமையான கதையை எடுத்து அதை சரியான கண்ணோட்டத்தில் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜே கே விக்கி.

ஆரம்பம் முதலே இறுதி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்பையும் பயத்தையும் எதிர்பார்ப்பையும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

எழுத்து இயக்கம் முதல் இசையில் ஆரம்பித்து ஒளிப்பதிவு வரை அனைத்தையும் நேர்த்தியான முறையில் வேலை வாங்கி நம்மையும் கதையோடு பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள் அறிமுக இயக்குனர் ஜே கே விக்கி.

அதன் பொருளைப் பொதிந்து தமிழனின் சரித்திரப் பெருமைகளை ஆன்மிகம் தூவி புனைகதை ஆகவும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் ஆகவும் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜேகே விக்கி.

இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளிவரக் கூடும் என்று தெரிகிறது.

அதில் நம் கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு ஒளியை விட இருளை நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறது.

கிடைத்த வாய்ப்பை இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷாவும் சரியாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்தப் படம் விரைவில் தமிழிலும் வெளியாகவிருக்கிறது.

மொத்தத்தில் பூச்சாண்டி திரைப்படம் நேர்த்தியான நல்ல முயற்சி.