தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூபாய் 2 கோடி ‘லைகா’ புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கினார்.!

சென்னை 19 ஜூன் 2021

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூபாய் 2 கோடி ‘லைகா’ புரொடக்ஷன்ஸ்
சுபாஷ்கரன் வழங்கினார்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக அச்சுறுத்தலால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது.

இதற்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு தாரளமாக நிதியுதவி வழங்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்காக கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள்

‘லைகா’ புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தனர்.

error: Content is protected !!