நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

சென்னை 21 ஜூலை 2021

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் சினு ராமசாமி.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாமனிதன் திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன்.

இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்
கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.