இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

” கந்தர்வன்” “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ்.
மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் “மீண்டும்”
மணிகண்டனை “மீண்டும்” படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார்.
அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இதில் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.
தாய்நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப் புலனாய்வு துறை ” பி” பிரிவு கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது.

எஸ்.எஸ். ஸ்டேன்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ்ராயன், “களவாணி” புகழ் துரைசுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை. வசனம், எழுதி இயக்கி உள்ளார் சரவணன்சுப்பையா. ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.
Related posts:
கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம்” மீண்டும் “
மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்
தல 60 படத்தை முடித்துவிட்டு மீண்டும் ரீமேக் படத்தில் அஜித்குமார்
தங்க நகைகளை எந்த நாள் எந்த நட்சத்திரத்தில் அணியலாம் ?
மாநாடு படத்தில் நடிக்க மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய STR? – கைவிடப்படுகிறதா மகா மாநாடு? புதிய அப்டேட்!
அஜித்குமாருடன் ‘தல 60’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
சத்யா” படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தனர். மீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி
வைகை புயல் வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் கமிட் ஆன பிரபலம்
ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணைகிறார் பிரபல இயக்குனர் ! *
நடிகர் ரியோ – நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.

