Monday, September 27
Shadow

ஷாங் சி ( Shang Chi ) திரை விமர்சனம் ரேட்டிங் –3.25 /5

நடிகர் நடிகைகள் – சிமு லியு, டோனி சியு-வை லியுங், ஆவ்க்வாஃபினா, ஃபலா சென், மெங் கர் ஜாங், ஃபிளோரியன் முன்டீனு, மைக்கேல் யேவ், ரோனி சியெங், வா யுவன், ஆண்டி லே, பால் டபிள்யூ. அவர்,ஜெய்டன் ஜாங், எலோடி ஃபாங், அர்னால்ட் சன், ஸ்டீபனி ஹ்சு, குணால் துதேகர், சாய் சின், ஜோடி லாங், டல்லாஸ் லியு, டேனியல் லியு, ஸ்டெல்லா யே, பெர்னாண்டோ சியன், மைக்கேல் – அந்தோனி டெய்லர், சாக் செர்ரி, ரேமண்ட் மா, தாவு ஷென் லிம், லா கா யுங், ஜானி கார், ஹார்மோனி அவர், லிடியா சார்க்ஸ், ஜான் ஹார்டிங், லினெட் கர்ரன், பெஞ்சமின் வாங், பெனடிக்ட் வோங், ஜேட் சூ, ஷெல்லி சூ, அலிஸ்டர் பேட்ஸ், டீ பிராட்லி பேக்கர், கெல்லி பெய்லி, ஆல்ஃபிரட் கே சோவ், ஷான் ராபர்ட் ஃபோலி, பென் கிங்ஸ்லி, கிறிஸ்டியன் ஹாரிஸ் நீமன், டிம் ரோத், பிங்க்சென் யே, மற்றும் பலர்.

தயாரிப்பு – மார்வெல் ஸ்டுடியோஸ்

இயக்கம் – டெஸ்டின் டேனியல் கிரெட்டன்

ஒளிப்பதிவு – வில்லியம் போப்

படத்தொகுப்பு – எலிசபெட் ரொனால்ட்ஸ்டாட்டர், நாட் சாண்டர்ஸ், .ஹாரி யூன்

இசை – ஜோயல் பி. வெஸ்ட்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா Done,

திரைப்படம் வெளியான தேதி – 03 செப்டம்பர் 2021

ரேட்டிங் –3.25 /5

 

அயர்ன்மேன்’ கதையின் அதன் சில சம்பவங்களையும், சில கதாபாத்திரங்களையும் இதில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்துக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை சில பிளாஷ் பேக் கதைகளோடு ஒன்றிணைத்து ஒரு பரவச அனுபவத்தை நம் கண் முன்னே காட்டியிருக்கும் திரைப்படம் ஷாங் சி.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் MCUவின் 25வது திரைப்படமாக வெளிவந்துள்ள ஷாங் சி.

இந்த திரைப்படம் மூலம் கிழக்காசிய நாடுகளில் இருந்து ஒரு சூப்பர் ஹீரோ அறிமுகமாகியுள்ளார்.

புதியதொரு கதாநாயகனை ஒரு சூப்பர் ஹீரோவை மீண்டும் தன் திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல் ஸ்டுடியோஸ்.

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்துக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளில் ஷாங் சி, அவனின் தங்கை மற்றும் தோழி என மூவரின் கதையாக இருக்கிறது.

கதாநாயகன் ஷாங் சியின் தந்தையாக டோனி லியுங் தனது கையில் அணிந்திருக்கும் ‘டென் ரிங்ஸ்’ என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல ஆயிரம் வருடங்கள் யுத்தம் செய்கிறார்.

Read Also  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

இதற்காக அவர் பல்வேறு அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ம கிராமத்தை எப்படியாவது கைப்பற்ற நினைக்கிறார்.

பல அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அவருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து தடுத்து நிற்கிறார்கள்.

யுத்தத்தில் வெற்றி யார் பக்கம் சாய்ந்தது.

இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன அந்த அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பதுதான் இந்த ஷாங் சி திரைப்படத்தின் மீதிக்கதை

அற்புத சக்திகள் நிறைந்த அந்த ஒரு கிராமத்தை தேடி போன இடத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண்ணின் அழகில் மயங்கி காதல் கொள்கிறார்.

இருவரும் காதல் திருமணம் செய்துகொள்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு உலகை ஆளும் எண்ணத்தைக் கைவிடுகிறார்.

இவர்கள் இருவருக்கும் ஷாங் சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள்.

இவர்களின் சந்தோஷமான அழகான வாழ்வில் திடீரென இடி விழுகிறது.

இதை அடுத்து மீண்டும் டோனி லியுங் தன்னுடைய பத்து ‘டென் ரிங்ஸ்’ கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்க, அவருக்கு எதிராக அவருடைய மகன் ஷாங் சி மகள் மெங்கர் சாங் தன்னுடைய தந்தைக்கு எதிராக களம் இறங்குகிறார்கள்.

இதன் பின்னர் நடக்கும் அதிரடி ஆக்சன் நிரம்பிய சாகச பயணமே ‘ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’.

ஹாங்காங் திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் வாங் கார் வாய் திரைப்படங்களின் ஆஸ்தான நடிகர் டோனி லியுங், ஷாங் ச்சியின் தந்தையாகவும் ஷாங் சி மிரட்டல் வில்லனாகவும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

இவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலும் இவர் நடிகர் டோனி லியுங், நடிப்பின் பல பரிமாணங்களை திரைப்படம் பார்க்கும் நம்மால் உணர முடிகிறது.

குறிப்பாக, காட்சியின் தன்மையையும், கதையின் ஓட்டத்தையும் தனது நடிப்பின் மூலமாகவே  பார்வையாளர்களை தனது வசம் ஈர்த்து கொள்கிறார்.

மனைவிக்கு நல்ல கணவராகவும் பாசமான தந்தையாகவும் அதிரவைக்கும் வில்லனாகவும், குலை நடுங்க வைக்கும் அடித்து அசுரனாகவும் என பல்வேறு உணர்ச்சிகளையும் சிறப்பான நடிப்பை இந்த ஷாங் சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஷாங் சியாக வரும் சிமு லியூ காமெடி காட்சிகளில் பெரிய அளவில் நடிப்பு வரவில்லை என்றாலும், ஆக்‌ஷனும், எமோஷனலும் நன்றாகவே நடிப்பு வருகிறது.

ஷாங் சியாக வரும் சிமு லியு நடிப்பைக் காட்டிலும் ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

Read Also  ஒ மை கடவுளே திரை விமர்சனம். ரேட்டிங் - 3./5

ஷாங் சியின் சகோதரியாக ஷியாலிங்காக மெங்கர் ஜாங் நடிப்பில் மட்டும் அல்லாமல் ஆக்‌ஷனும், எமோஷனலும் நன்றாகவே நடித்து இருக்கிறார்

ஷாங் சியின் தோழியாக வரும் நடிகை ஆவ்க்வாஃபினா காமெடி காட்சிகளில் பின்னி எடுத்துள்ளார்.

இவர் பேசும் பல வசனங்களும் திரையரங்குகளில் சிரிப்பலையை உண்டாக்குகிறது.

ஆனால் , இவர்கள் இருவரையும் மீறி திரையை காமெடியில் நிரப்புவது ஷாங்க் சியின் தோழியாக வரும் அக்வாஃபினா (Awkwafina) மட்டும்தான்.

வில்லன் டோனி லியுங் மனைவியும், ஷாங் சியின் அம்மாவுமான ஃபலா சென் நடிப்பில் தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்.

மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படங்களுக்கே உண்டான பிரமாண்டம், அழகு, வசீகரம், மெய்சிலிர்க்க வைக்கும் ஆக்சன் காட்சிகள், அதில் அழகாகப் பளிச்சிடும் செண்டிமெண்ட் என அத்தனை அம்சங்களும் இந்த ‘ஷாங் சி’ திரைப்படத்திலும் பிரமாண்டமாகப் பிரதிபலித்துள்ளது.

எப்போதும் போல் பாரபட்சம் பார்க்காமல் பரபரக்கும் ஆக்சன் காட்சிகளில் எந்த குறையும் வைக்காமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகளில் மார்வெல் ஸ்டுடியோஸ் தங்களின் ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் போடும் உழைப்பு இதிலும் பிரதிபலிக்கிறது.

மாய உலகம், அதில் வரும் வித்தியாசமான மிருகங்கள், புதியதோர் கலாச்சாரம், மந்திரசக்திகள், வித்தியாசமான உடைகள் என ஒரு மர்மம் நிறைந்த வித்தியாசமான தேசத்தைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தி மீண்டும் ஒருமுறை சபாஷ் வாங்கியுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ்.

அதுவும் இந்த முறை கிழக்காசிய தற்காப்புக் கலைகள் திரைப்படத்துக்கு பெரும் ப்க்கப் பலமாக அமைந்திருக்கின்றன.

Shaolin Soccer, Crouching Tiger Hidden Dragon திரைப்படங்களில் நாம் பார்த்த சண்டைக் காட்சிகளைப் போல இதிலும் பல சண்டைக் காட்சிகள். ஜெட்லி, ஜாக்கி சான் திரைப்படங்கள் வந்து செல்கின்றன.

ஒரு நான்-லீனியர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் அயர்ச்சி தென்பட்டாலும், கிழக்காசிய தற்காப்புக் கலைகள் அடங்கிய ஆக்சன் காட்சிகள் அதனைச் சரி செய்து விடுகிறது.

வழக்கம் போல் இந்த படத்திலும் மார்வெல்லின் புதிய ஹீரோவான ஷாங் ச்சி, அவெஞ்சர்களோடு இணையும் காட்சி ரசிக்கும்படியும், எதிர்பார்ப்புகளைத்  தூண்டும் படியும் அமைந்துள்ளது.

அதேபோல, ஆங்காங்கே வரும் அவெஞ்சர்களின் சர்ப்ரைஸ் எண்ட்ரிக்கள் ரசிகர்களுக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

என்னதான் ஹாலிவுட் படங்கள் உலகளவில் பிரமாண்ட வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றாலும், அதே வரவேற்பு புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ ஆகியோரின் கிழக்காசிய ஆக்சன் படங்களுக்கும் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்த இரண்டு பட உலகும் தற்போது ஒன்றாகி, மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸில் இணைந்து மக்களை மகிழ்விக்க ‘ஷாங் ச்சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ படம் மூலம் தியேட்டர்களுக்கு வந்தடைந்துள்ளது.

Read Also  டாணா திரை விமர்சனம்

அதே சமயம், புதிய உலகம், வித்தியாச பலதரப்பட்ட மிருகங்கள், மாறுபட்ட கலாசாரம் என கதை திரைக்கதை பேப்பரில் ஸ்ட்ராங்காக இருக்கும் விஷயங்கள் அனைத்தும் திரையில் முழுமையான ஒன்றாகப் பிரதிபலிக்கவில்லை.

அவர்கள் காட்டும் மாய உலகின் கிராமம் கூட நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட செட் போட்ட ஃபீலையே தருகின்றன.

பிளாக் பேந்தர்’ திரைப்படத்தில் வகாண்டா தேசத்தைப் பிரமாண்டமாக காட்சிப்படுத்திய மார்வெல்லா இப்படிச் செய்தது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

நிகழ்காலக் கதை, ப்ளாஷ்பேக் பின்னணி என மாறி மாறி கதை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், பல இடங்களில் ப்ளாஷ்பேக் சென்டிமென்ட் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கதை back story நோக்கி செல்ல ஆரம்பிக்கும் போதெல்லாம் திரைக்கதை படுத்து விடுகிறது.

விறுவிறு திரைக்கதைக்கு இத்தனை ஸ்பீட் பிரேக்கர்கள் அவசியமா?

ஆனால், வழக்கம் போல் ஒரு புதிய ஹீரோவை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மையக் கதைக்களத்துடன் இணைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி, தமிழ் டப்பிங்கில் பார்த்தாலும் சரி காமெடி நடிகையும் பாடகியுமான அக்வாஃபினா  கலக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

திரைப்படம் முடிந்ததும் அப்படியே எழுந்து பறந்துவிடாதீர்கள்.

இரண்டாம் போஸ்ட் கிரெடிட் லட்சியம்.

முதல் போஸ்ட் கிரெடிட் நிச்சயம்.

ஏனெனில் முதல் போஸ்ட் கிரெடிட்டில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ – எப்போதும் போல் மர்வெல் ஸ்டுடியோஸ் மவுசுதான்.

CLOSE
CLOSE