கொரோனா வைரஸ் நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டனர் சென்னை 28 நண்பர்கள்.

சென்னை 02 ஜூன் 2021

கொரோனா வைரஸ் நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டனர் சென்னை-28 நண்பர்கள் .

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சென்னை 28’ திரைப்பட நடிகர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சென்னை 28. இந்த திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது.

இதில் சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!